ஜேம்ஸ் கேமரூனின் அசத்தல் 'அவதார்'!

By Staff

Avatar Teaser Poster
டைட்டானிக் எனும் மெகா வெற்றிப் படத்துக்குப் பின்னர் 12 ஆண்டுகள் தீவிர உழைப்பில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் உருவாக்கியிருக்கும் படம் அவதார்.

இது, உலக சினிமா வரலாற்றில் புதிய சரித்திரத்தை எழுதும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை உருவாக்க ரூ.1200 கோடிக்கும் மேல் செலவழித்துள்ளனர். உலக சினிமா சரித்திரத்தில் மிக அதிக பொருட்செலவில் உருவாகும் நான்காவது படம் அவதார்.

விண்வெளியில் புதிய கிரகமொன்றில் நடக்கும் மகா த்ரில்லிங்கான அனுபவங்கள்தான் கதை. இதற்கு முன் ஏலியன்ஸ் திரைப்படத்தில் கேமரூனுடன் இணைந்த சிகுர்னி வீவர் அவதார் படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

டிசம்பர் மாதம் 18-ம் தேதி இந்தியா உள்பட உலகெங்கும் ஒரே நேரத்தில் இந்தப் படம் வெளியாகிறது. அதற்கு முன் படத்தின் ட்ரைலர் மற்றும் முக்கிய காட்சிகளை உலகெங்கும் ஒரே நாளில் திரையிட்டுக் காட்டினார்கள். பத்திரிகையாளர்கள் மற்றும் முக்கிய திரையுலகப் பிரமுகர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக காட்டப்பட்டது.

இந்த சிறப்புக் காட்சிக்காக சென்னையில் சத்யம் காம்ப்ளக்ஸ் தேர்வு செய்யப்பட்டிருந்தது. படத்தின் விநியோகஸ்தர்களான ட்வென்டியத் பாக்ஸ் சென்சுரி நிறுவனம் - சத்யம் இணைந்து இந்தக் காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அவதார் டிரைலர் மற்றும் காட்சிகள் பிரமிக்க வைப்பதாய் இருந்தன. படத்துக்கான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்துவிட்டது இந்த முன்னோட்டக் காட்சி என்றால் மிகையல்ல. இளம் இயக்குநர்கள் முருகதாஸ், விஷ்ணுவர்தன் உள்ளிட்ட பலரும் பிரமித்துப் போய் நின்றனர் அந்த காட்சி அமைப்புகளைப் பார்த்து.

இந்தப் படம் வெளியான பிறகு கேமரூன் இன்னொரு படத்தை இயக்கப் போகிறாராம். அது செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறுவதை மையமாகக் கொண்ட கதையாம். இதற்காக பல ஆராய்ச்சிகளை நடத்தியுள்ளார், நாசாவின் உதவியுடன்.

நாசா செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் தருணத்தில் இந்தப் புதிய படம் வருமாம். ரூ.2000 கோடிவரை இந்தப் படத்துக்கு பட்ஜெட் போட்டிருக்கிறாராம் கேமரூன். இன்னும் கூட அதிகரிக்கலாம், தேவை, காலத்தைப் பொறுத்து என்கிறார்கள்.

ஹாலிவுட் படங்களுக்கு இணையாக நாங்களும் படம் எடுக்கிறோம், தொழில் நுட்பம் வளர்ந்துவிட்டது என நம்ம ஊர் இயக்குநர்கள் சொல்வதை ஒரு கணம் நினைத்துப் பார்த்தோம்.

அவமானமாய் இருந்தது... இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது கொஞ்சமல்ல... நிறைய்ய்ய்ய்யவே இருக்கிறது!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X