ஜாக்சன் நினைவாக உடைக்கு மாறிய ஜேனட்!

இந்த மாதம் நடந்த எம்டிவி இசை விருதுகள் விழாவின்போது கருப்பு நிற உடையி்ல் வந்திருந்தார் ஜேனட். அதேபோல லண்டனில் நடந்த பேஷன் ஷோ ஒன்றிலும் அவர் கருப்பு நிற உடையில்தான் வந்திருந்தார்.
இதுகுறித்து ஜேனட்டுக்கு நெருங்கியவர்கள் கூறுகையில், ஜாக்சன் குடும்பத்தினர் இன்னும் அவரது மறைவை மறக்கவில்லை. சோகத்திலிருந்து வெளிவரவில்லை. ஜேனட்டும் அப்படித்தான்.
ஜாக்சனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு வருட காலத்திற்கு கருப்பு நிற உடை அணிந்து துக்கம் அனுசரிக்க முடிவு செய்துள்ளார் ஜேனட்.
ஜாக்சனுடன் ஜேனட்டுக்கு மிக நெருங்கிய நட்புடன் கூடிய உறவு இருந்தது. மிகுந்த பாசத்துடன் இருந்தார். ஜாக்சனின் மறைவு ஜேனட்டை சிதறடித்துள்ளது. தனது அண்ணனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கருப்பு நிற உடை அணிய அவர் தீர்மானித்தார்.
அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துடன் தனது துக்கத்தை முடித்துக் கொள்வார் அவர் என்று தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











