கடன் சிக்கலில் மடோனா

லூசியானா கோர்ட்டில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்துள்ள பைனான்சியரின் பெயர் ஜே டைக்ஸ் ஜூனியர்.
அந்த வழக்கில், மடோனாவும், அவரது மேனேஜர் கய் ஓசியரி, அவர்களின் மாவரிக் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனமும் எங்களது நிறுவனத்தில் மெட்டீரியல் கேர்ள்ஸ் என்ற பெயரில் படம் தயாரிப்பதற்காக 4 லட்சம் டாலர் கடன் பெற்றனர்.
கடன் வாங்கியபோது என்னை இணைத் தயாரிப்பாளராக சேர்த்துக் கொள்வதாக உறுதியளித்திருந்தனர். ஆனால் கூறியபடி செய்யவில்லை. மேலும் கடன் தொகையையும் அவர்கள் திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
வழக்கு ஒரு பக்கம் இருக்க 250 பேர் அடங்கிய மெகா குழுவுடன் உலக சுற்றுப்பயணத்தில் மும்முரமாக இருக்கிறார் மடோனா. இப்போது அந்தக் குழுவில் டாக்டர் ஸ்டீவன் மார்கோலினும் இணைந்துள்ளார். தினசரி கச்சேரி முடிந்தவுடன் மடோனாவுக்கு மசாஜ் செய்வதற்காக இவர் குழுவில் இணைந்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications











