மனைவி தன்னை நிர்வாண கோலத்தில் பார்க்க விரும்பாத ஜாக்சன்

மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை அவரது 40 ஆண்டு கால நண்பரும், பயோகிராபருமான ரான்டி டாரொபொரெல்லி வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக ஜாக்சனின் செக்ஸ் வாழ்க்கை குறித்து அவர் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
லண்டனைச் சேர்ந்த டெய்லி மெயிலுக்கு டாராபொரெல்லி கூறியுள்ளதாவது..
டீன் ஏஜ் வயது முதலே செக்ஸ் வாழ்க்கை குறித்து ஜாக்சனுக்கு ஒரு வித பயமும், குழப்பமும் இருந்து வந்துள்ளது. பெண்களுடன் பழகவே அவர் கூச்சப்படுவார். இது அவரது தாயாரை பெரிதும் கவலைப்படுத்தியது.
ஆனால் வளர்ந்து வாலிபன் ஆனதும் பல ஹாலிவுட் நடிகைகளுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. ப்ரூக் ஷீல்ட்ஸ், டடும் ஓநீல் உள்ளிட்டோருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. அப்போதும் கூட ஜாக்சன் அப்படியேதான் இருந்தார்.
இதுகுறித்து ப்ரூக் ஷீல்ட்ஸ் ஒரு முறை கூறுகையில், ஜாக்சனுடன் எப்படி ஒரு பெண்ணால் உறவு வைத்துக் கொள்ள முடியும். நாங்கள் இருவரும் சேர்ந்து இருந்தபோது அவர் எதுவுமே பேசாமல் வெட்கத்துடன் இருந்தார். இரண்டு வார்த்தைகள் பேசியிருந்தாலே அதிகம். அவர் இன்னும் கன்னி கழியாதவர் என்றே நினைக்கிறேன். செக்ஸ் வைத்துக் கொள்ள அவர் பயப்படுகிறாரோ என்று நான் சந்தேகிக்கிறேன். செக்ஸ் மீது அவருக்கும் விருப்பம் இருப்பதாக தெரியவில்லை.
ஜாக்சனுக்கு செக்ஸை விட குழந்தைகள் மீதுதான் அதிக விருப்பம் இருந்தது. தனது உணர்வுகளை அவர் ஒருபோதும் ரகசியமாக வைத்துக் கொள்ள விரும்பியதில்லை.
எனக்குக் குழந்தைகளைத்தான் பிடித்திருக்கிறது. அவர்களுடன் சேர்ந்து படுத்துக் கொள்ளவே விரும்புகிறேன் என்று பலமுறை என்னிடம் கூறியுள்ளார்.
ஆனால் இப்படி குழந்தைகள் மீது அவர் வைத்திருந்த பாசமே பின்னர் அவரை சிக்கலுக்குள்ளாக்கி விட்டது.
குழந்தைகளிடம் தவறாக நடந்து கொண்டதாக வழக்கு வந்தபோது, ஜோர்டி சான்டிலர் என்ற சிறுவன், எனது ஆண் குறியை ஜாக்சன் தொட்டுப் பார்த்தார் என்று சாட்சியம் அளித்தான்.
அந்தப் பிரச்சினையிலிருந்து ஒரு வழியாக மீண்டு அவர் வெளியே வந்தபோது தனது ஆத்மார்த்த குரு எல்விஸ் பிரஸ்லியின் மகள் லிசா மேரியுடனான சந்திப்பு ஏற்பட்டது.
1994ம் ஆண்டு டொமினிக்கன் நாட்டில் வைத்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர் இருவரும். திருமணத்தின்போது யாருமே உடன் இருக்கவில்லை.
செக்ஸ் வாழ்க்கையில் ஜாக்சன் நாட்டமில்லாதவராக இருந்தாலும் கூட அவரும், மேரியும் நல்ல செக்ஸ் வாழ்க்கையை வாழ்ந்ததாகத்தான் கருதுகிறேன். இதை மேரியின் சில பேட்டிகளில் புரிந்து கொள்ளலாம்.
மேரி ஒருமுறை தனது தோழியிடம் ஜாக்சன் குறித்து சிலாகிததுக் கூறினாராம். அதேசமயம், சில நேரங்களில் விநோதமாக நடந்து கொள்வதாகவும் லிசா மேரி கூறியிருந்தார்.
ஒரு முறை, லிசா மேரி படுக்கை அறை விளக்கைப் போடப் போனபோது நிர்வாண கோலத்தில் இருந்த ஜாக்சன் படு வேகமாக பாத்ரூமுக்குள் ஓடி விட்டாராம். தன்னை நிர்வாண கோலத்தில் மனைவி பார்ப்பதை ஜாக்சன் விரும்பவில்லையாம்.
கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் கழித்து உடல் முழுக்க உடையைச் சுற்றிக் கொண்ட பிறகுதான் வெளியே வந்தாராம் ஜாக்சன்.
தனது மனைவி படுக்கையில் இருக்கும்போது நகைகளை அணிந்திருக்க வேண்டும் என எதிர்பார்ப்பாராம் ஜாக்சன்.
தனக்காக ஒரு குழந்தை பெற்றுத் தருமாறு மேரியிடம் கேட்டதால், ஜாக்சனுக்கும், மேரிக்கும் இடையே பிரச்சினை வெடித்தது. அது விவாகரத்தில் போய் முடிந்தது.
அதற்கு லிசா மேரி சொன்ன காரணம்தான் முக்கியமானது - நாங்கள் இருவரும் உறவு கொண்டால்தானே நான் கர்ப்பமாக முடியும். அப்போதுதானே ஜாக்சனுக்கு நான் குழந்தை பெற்றுத் தர முடியும் என்றாராம் லிசா மேரி.
இதன் மூலம் ஜாக்சன் நார்மலான செக்ஸ் வாழ்க்கையை வாழவில்லை என்றுதான் புரிகிறது.
உலகை ஆண்ட ஜாக்சனால், வாழ்க்கையை சரிவர வாழ முடியாமல் போனது கொடுமைதான்.


Click it and Unblock the Notifications











