பாடிகார்டுடன் பிரிட்னி 'கசமுசா'!

26 வயதாகும் பிரிட்னி அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமாகி விட்டது. அந்த வரிசையில், அவருக்கும் அவரது பாடிகார்ட் டாம் லீக்கும் இடையே, படு நெருக்கமான உறவு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
டாம் லீ இஸ்ரேல் நாட்டு ராணுவ வீரர். இருவரும் சேர்ந்து ஒரு இறவை ஒரே அறையில் கழித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றனர்.
இதுகுறித்த சூடான செய்தியை சன் இதழ் வெளியிட்டு சூட்டைக் கிளப்பியுள்ளது. டாம் லீ மீது பிரிட்னி காதல் கொண்டுள்ளாராம். அவர்தான் முதலில், லீ மீதான அன்பை வெளிப்படுத்தினாராம். இதையடுத்து இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு சமீபத்தில் இருவரும் சேர்ந்து ஒரு இரவைக் கழித்தனராம்.
பிரிட்னிக்குப் பிடித்தமான சில விஷயங்களை தனது உடலில் பச்சை குத்திக் கொண்டுள்ளாராம் லீ. இப்போதெல்லாம் இருவரும் சேர்ந்தேதான் காணப்படுகின்றனராம். மன ரீதியில் ஆரம்பித்த இந்த உறவு இப்போது உடல் ரீதியாகவும் மாறி விட்டதாம்.
சமீபத்தில் இருவரும் மெக்சிகோவில் ஒன்றாக சுற்றியுள்ளனர். லீயுடனான நட்பை பிரிட்னி பெரிதும் மதிக்கிறாராம், விரும்புகிறாராம் ... இப்படிப் போகிறது சன் செய்தி.


Click it and Unblock the Notifications











