மடோனா அழைப்பு-மறுத்த யோகா குரு

Madonna with Christina
தனக்காக தனியாக யோகா பயிற்சி வகுப்பை எடுக்க வேண்டும என்று பாப் ராணி மடோனா விடுத்த அழைப்பை யோகாசன நிபுணரான பிக்ரம் செளத்ரி நிராகரித்து விட்டார். எல்லோரையும் போல குரூப்பாக வந்துதான் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறி விட்டாராம்.

இங்கிலாந்தைச் சேர்ந்த கோடீஸ்வர யோகாசன நிபுணர் பிக்ரம் செளத்ரி. இவரிடம் ஏராளமான பேர், பல்வேறு பிரபலங்கள் யோகா பயிற்சி எடுத்துக் கொள்கின்றனர்.

ஆனால் இவரை தனது பெர்சனல் யோகா குருவாக வைத்துக் கொள்ள விரும்பி மடோனா அணுகினார். ஆனால் அதை நிராகரித்து விட்டாராம் செளத்ரி.

எல்லோரையும் போல பொதுவான வகுப்புக்கு வந்துதான் பயிற்சி எடுக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் வந்து பயிற்சி அளிக்க என்னால் முடியாது என்று கூறி விட்டாராம் செளத்ரி.

சமீபத்தில்தான் மடோனாவின் பெர்சனல் பிட்னஸ் பயிற்சியாளரான டிரேஸி ஆன்டர்சன் விலகினார். இதையடுத்து செளத்ரியை தனது உடல் ஆரோக்கிய ஆலோசகராக வைத்துக் கொள்ள விரும்பியே அணுகினாராம் மடோனா.

வழக்கமான உடற்பயிற்சி ஆலோசகராக இல்லாமல், யோகாசனம் மூலம் முயற்சி செய்து பார்க்கலாமே என்பது மடோனாவின் எண்ணம்.

இதுகுறித்து செளத்ரி கூறுகையில், தனியாக பாடம் எடுக்குமாறு கோரி மடோனாவே என்னை அணுகினார். ஆனால் அதை நான் நிராகரித்து விட்டேன். கற்றுக் கொள்ள விரும்பினால் பொதுவான வகுப்புக்குத்தான் வர வேண்டும். முதலில் ஈகோவை விட்டு விட வேண்டும். அப்போதுதான் யோகா பலன் அளிக்கும் என்று அவரிடம் கூறினேன் என்றார் செளத்ரி.

இவரிடம் ஜார்ஜ் க்ளூனி, ஜெசிகா சிம்ப்சன், ஜிம் கேரி போன்றோரும் யோகா பயிற்சி எடுத்து வருகின்றனர். தனது யோகசானப் பள்ளிக்கு அருகில் இருந்தால், கண்டிப்பாக வந்து குறைந்தது ஒன்றரை மணி நேரம் யோகா செய்து விட்டுப் போவார்கள் என்கிறார் செளத்ரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X