ஒமர் பட்டி ஜாக்சனின் மகன்தான் - தந்தை ஜோ கூறுகிறார்

நார்வேயைச் சேர்ந்த 25 வயதான ஒமர் பட்டி, ஜாக்சனின் நான்காவது குழந்தை என்ற கருத்து உள்ளது. பட்டியின் தாயார் முன்பு ஜாக்சனிடம் ஆயாவாக வேலை பார்த்தவர். அவரது கணவர் டிரைவராக இருந்தார். அந்த சமயத்தில் ஜாக்சனுக்கும், பட்டியின் தாயாருக்கும் ஏற்பட்ட உறவில் பிறந்தவர்தான ஒமர் பட்டி என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக முன்பே செய்திகள் இருந்தாலும் ஜூலை 7ம் தேதி நடந்த ஜாக்சன் இறுதி நிகழ்ச்சியின்போது ஒமர் பட்டி கலந்து கொண்டு, முன் வரிசையில் ஜாக்சன் குடும்பத்தினருடன் அமர்ந்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் தான் ஜாக்சனின் மகன் அல்ல என்று சமீபத்தில் கூறியிருந்தார் ஒமர். ஆனால் பட்டி, ஜாக்சனின் 4வது மகன்தான் என்று கூறியுள்ளார் ஜாக்சனின் தந்தை ஜோ ஜாக்சன்.
இதுகுறித்து சன் இதழுக்கு ஜோ ஜாக்சன் கூறுகையில், ஆமாம், ஜாக்சனுக்கு நான்காவது குழந்தை உண்டு என்பது எனக்குத் தெரியும். அது நிச்சயம் ஒமர் பட்டிதான்.
பட்டி, அப்படியே ஜாக்சனைப் போலவே இருக்கிறார், ஜாக்சனைப் போலவே நடக்கிறார், ஜாக்சனைப் போலவே டான்ஸ் ஆடுகிறார்.
மிகச் சிறந்த டான்ஸர் மட்டுமல்ல, டான்ஸ் பயிற்சியாளராகவும் பட்டி விளங்குகிறார்.
எதிர்காலத்தில் ஜாக்சனின் வாரிசாக இவர் வருவாரா என்பது எனக்குத் தெரியாது என்றார் ஜோ.


Click it and Unblock the Notifications











