Don't Miss!
- Sports டபுள் ஹாட்ரிக் எடுத்தால் தான் வென்று இருக்க முடியும்! பிட்ச் மோசம் இல்ல-நாங்க தான்!சுப்மன் கில் கலகல
- Lifestyle கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- Automobiles குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
- News ‛‛நீங்கள் தான் என் சொத்து’’.. அண்ணாமலைக்கு பிரதமர் மோடி சொன்ன வாழ்த்து.. குஷியில் தமிழக பாஜக
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நான் ஒரு 'கே' - ரிக்கி மார்ட்டின்
இதுகுறித்து தனது இணையதளத்தில் அவர் எழுதியுள்ளதாவது...
இப்போது நான் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையான அன்புடன், ஏற்புத்தன்மையுடன், கடமையுடன் கூடியது. இதை எழுத நான் தயங்கவில்லை. எனது ஆழ் மனதின் அமைதியை இது வெளிப்படுத்துகிறது.
நான் ஒரு ஹோமோசெக்ஸுவல் மனிதன் என்று சொல்லிக் கொள்வதைப் பெருமையாக கருதுகிறேன். இப்படி இருப்பதற்காக நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார் ரிக்கி.
விரைவில் தனது வாழ்க்கை வரலாற்றை எழுதப் போவதாகவும் கூறியுள்ளார் பாப் பாடகரான ரிக்கி மார்ட்டின். தனது வாழ்க்கையில் இது பெரும் திருப்புமுனையாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த உண்மையை இதுவரை தான் சொல்லாமல் இருந்ததற்கு தனது நண்பர்களே காரணம் என்றும் ரிக்கி கூறியுள்ளார். அப்படிச் சொன்னால் அதை உலகம் ஏற்காது, உண்மையை புரிந்து கொள்ளாது என்று அவர்கள் கூறியதால்தான் தான் இதுவரை சொல்லாமலேயே இருந்ததாக கூறியுள்ளார் ரிக்கி.
வாடகைத்தாய் மூலம் கடந்த 2008ம் ஆண்டு இரட்டைக் குழந்தைக்குத் தந்தையானவர் ரிக்கி என்பது நினைவிருக்கலாம்.