2014ல் அதிகம் பார்க்கப்பட்டது எந்த படத்தின் 'ட்ரெய்லர்' தெரியுமா?
லாஸ் ஏஞ்சல்ஸ்: 50 ஷேட்ஸ் ஆஃப் கிரே ஹாலிவுட் படத்தின் ட்ரெய்லர் தான் 2014ம் ஆண்டில் அதிகமானோரால் பார்க்கப்பட்ட ட்ரெய்லர் ஆகும்.
இ.எல். ஜேம்ஸ் என்ற பெண் எழுதிய 50 ஷேட்ஸ் ஆஃப் கிரே என்ற புத்தகம் விற்பனையில் உலக அளவில் சக்கை போடு போட்டது. ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு புத்தகத்தை வாங்கி ஜேம்ஸின் வங்கி கணக்கின் இருப்பை அதிகரித்தனர்.
இந்நிலையில் தான் இந்த 50 ஷேட்ஸ் ஆஃப் கிரே புத்தகத்தை படமாக்கினால் என்ன என்று ஹாலிவுட்காரர்களுக்கு தோன்றியது.

100 கோடி புத்தகங்கள்
50 ஷேட்ஸ் ஆஃப் கிரே புத்தகம் உலக அளவில் 10 கோடி அளவுக்கு விற்பனை ஆனது. இந்த புத்தகம் 52 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது.

படம்
புத்தகமே இப்படி சக்கை போடு போடுகிறது என்றால் அதை படமாக்கினால் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட் தான் நினைத்த ஹாலிவுட்காரர்கள் அந்த புத்தககத்தின் பெயரிலேயே படத்தை எடுத்து வருகிறார்கள்.

ஜேமி, டகோட்டா
50 ஷேட்ஸ் ஆஃப் கிரே படத்தில் கிறிஸ்டியன் கிரேயாக ஜேமி டோர்னனும், அனஸ்தேசியா ஸ்டீலாக டகோட்டா ஜான்சனும் நடித்து வருகிறார்கள்.

ட்ரெய்லர்
50 ஷேட்ஸ் ஆஃப் கிரே படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்ட ஒரு வாரத்தில் அதை யூடியூப்பில் 3 கோடியே 60 லட்சம் பார்த்துள்ளனர்.

புதிய சாதனை
2014ம் ஆண்டில் உலக அளவில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட பட ட்ரெய்லர் என்றால் அது 50 ஷேட்ஸ் ஆஃப் கிரேவின் ட்ரெய்லர் தான். இதற்கு முன்பு டீனேஜ் ம்யூடன்ட் நின்ஜா டர்ட்டில்ஸ்(3 கோடியே 10 லட்சம்) படத்தின் ட்ரெய்லர் தான் அதிகம் பார்க்கப்பட்டது ஆகும்.

அப்படி என்ன இருக்கு?
50 ஷேட்ஸ் ஆஃப் கிரே புத்தகம் பால் உணர்வை தூண்டுவதாகும். இந்நிலையில் அது படமாக்கப்படும்போது மக்கள் பார்க்காமலா விடுவார்கள்.

மெயின் பிக்சர்
ட்ரெய்லரையே உலக மக்கள் இத்தனை பேர் பார்த்துள்ளார்கள் என்றால் படம் ரிலீஸானால் வசூலில் புதிய சாதனை படைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.


Click it and Unblock the Notifications











