Don't Miss!
- Finance
ஓலா: 1000 ஏக்கர் நிலம் யாருக்கிட்ட இருக்கு..? 6 மாநிலத்துடன் பேச்சுவார்த்தை.. எதற்காக தெரியுமா..?
- Lifestyle
உங்க உடல் எடையை குறைக்க இந்த விரத வழிமுறைகளை ஃபாலோ பண்ணுன்னா போதுமாம் தெரியுமா?
- Technology
"இது எல்லாமே ரொம்ப பெருமையா இருக்கு"- பிரமாண்ட ட்ரோன் திருவிழாவில் பிரதமர் மோடி பேச்சு!
- Sports
அஸ்வின் தான் ராஜஸ்தானின் பெரும் பிரச்சினையே.. 2 முக்கிய விஷயம்.. ஆதாரத்துடன் கூறிய மஞ்ச்ரேக்கர்!
- News
அண்ணாமலையின் பேச்சு அரைவேக்காட்டுத்தனமானது.. கொலுபொம்மை விழாவா நடந்தது? கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்!
- Automobiles
இந்தியாவில் வெறும் 2% தான் தேசிய நெடுஞ்சாலை, ஆனால் டோல்கேட் வசூலில் இது தான் நம்பர் 1
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
54 வயதில் 5 முறை விவாகரத்து செய்த பிரபல நடிகை... ஷாக்கான ரசிகர்கள்
டொரன்டோ : பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய 54 வது வயதில் ஐந்தாவது கணவரையும் விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இதைக் கேட்டு ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். ஐந்தாவது கணவரை பிரிவதற்கான காரணம் எதையும் பமீலா இதுவரை தெரிவிக்கவில்லை.
பிரபல மாடலும் கனேடிய - அமெரிக்க நடிகையுமான பமீலா ஆன்டர்சன் பல பிரபலமான படங்களில் நடித்துள்ளார். பிளேபாய் மேகசின், Home Improvement, Baywatch, VIP போன்ற பல டிவி சீரியல்களில் நடித்துள்ளார். Raw Justice, Super hero உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
எச்சரிக்கையாக இருங்கள்… நடிகர் சாந்தனு போட்ட திடீர் ட்வீட்!

பிக்பாஸ் இந்தி போட்டியாளர்கள்
இவர் பிக்பாஸ் இந்தியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் தற்போது 54 வயதாகும் பமீலா தனது ஐந்தாவது கணவரை விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முதல் கணவரை பிரிந்த நடிகை
பமீலா தனது முதல் கணவரை டோம்மி லீயை 1995 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக 1998 ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். பிறகு பிரபல மாடலான மார்கஸ் சென்கென்பர்க் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த உறவு 2001 ம் ஆண்டு முறிந்தது.

இருமுறை திருமணம், இருமுறை விவாகரத்து
பிறகு பாடகர் கிட் ராக் என்பவரை 2006 ம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் பமீலா. அதே ஆண்டே இருவருக்கும் விவாகரத்தும் ஆனது. மூன்றாவதாக 2007 ல் ரிக் சாலமோன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பமீலா. 2008 ம் ஆண்டே இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர். மீண்டும் ரிக்கை 2014 ல் மறுமணம் செய்து கொண்டு, 2015 ல் அவரை விட்டு மீண்டும் பிரிந்து சென்றார்.

12 நாட்களில் விவாகரத்து
2017 ல் பிரெஞ்ச் கால்பந்தாட்ட வீரர் ஆடில் ராமியுடன் டேட்டிங்கில் இருந்து வந்தார் பமீலா. பிறகு 2019 ல் ராமியுடனான உறவை முறித்துக் கொள்வதாக பரீலா அறிவித்தார். நான்காவதாக ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஜோன் பீட்டஸ் என்பவரை 2020 ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி திருமணம் செய்து கொண்டார். ஆனால் வெறும் 12 நாட்கள் மட்டுமே அவருடன் சேர்ந்து வாழ்ந்த நிலையில் பிப்ரவரி 1 ம் தேதி விவாகரத்தை அறிவித்தார்.

ஐந்தாவது முறையும் விவாகரத்து
வெறும் 12 நாளில் தனது நான்காவது கணவரை பமீலா பிரிந்தது ஒட்டுமொத்த ஹாலிவுட்டின் கவனத்தையும் ஈர்த்தது. அதற்கு பிறகு 2020 ம் ஆண்டு தனது பாடிகார்ட்டான ஹேஹர்ஸ்ட் என்பவரை ஐந்தாவதாக திருமணம் செய்து கொண்டார் பமீலா. தற்போது அவரையும் பிரிவதாக அறிவித்துள்ளார். இதைக் கேட்டு ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். காரணம் ஏதும் சொல்லாமல் குறுகிய காலங்களிலேயே எதற்காக திருமண வாழ்க்கையை பமீலா முறித்து வருகிறார் என தெரியாமல் ஹாலிவுட்டே குழம்பிப் போய் உள்ளது.