எனக்கு 61.. உனக்கு 32.. இளம் வயது காதலியுடன் புரமோஷனில் பிசியான பிராட் பிட்.. டிரெண்டாகும் பிக்ஸ்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் தனது இளம் வயது காதலியான இனஸ் டி ராமன் (Ines De Ramon) உடன் F1 படத்தின் புரமோஷனில் பிசியாகி வரும் நிலையில், இருவரது புகைப்படங்கள் தான் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. சமீபத்தில், நடிகர் டாம் க்ரூஸை சந்தித்த புகைப்படங்களும் வேறலெவலில் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

மிஷன் இம்பாசிபிள் ஃபைனல் ரெக்கனிங் படத்தைத் தொடர்ந்து ஹாலிவுட்டின் அடுத்த பிரம்மாண்டமான படமாக பிராட் பிட் நடித்துள்ள F1 திரைப்படம் வரும் ஜூன் 27ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தியாவிலும் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் இந்த வாரம் வெளியாகிறது.

61 year old Brad Pitt and his 32 year old Girl Friend Ine De Ramon photos trending during F1 promotion
Photo Credit:

அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் இந்த படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் காதலியுடன் கைகோர்த்தபடி பிராட் பிட் செல்லும் புகைப்படங்கள் சர்வதேச அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ஹாலிவுட் அஜித் குமார்: தமிழ்நாட்டில் நடிகர் அஜித் குமார் எப்படி கார் பந்தயங்களில் கலந்துக் கொண்டு கலக்கி வருகிறாரோ அதே போல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் F1 படத்திற்காக பல கார் பந்தயங்களில் பங்கேற்று தனது கார் ஓட்டும் திறமையை வளர்த்துக் கொண்டு இந்த படத்தில் பெரிய ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். ஜோசப் கொசின்ஸ்கி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் இந்த வாரம் உலகளவில் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஞ்சலினா ஜோலியுடன் விவாகரத்து: 61 வயதாகும் அமெரிக்க நடிகரான பிராட் பிட் பற்றி ஏகப்பட்ட ரசிகர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியை தான் 2014ம் ஆண்டு திருமணம் செய்து, 2019ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். அதற்கு முன்னதாக ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் ஆனிஸ்டனை திருமணம் செய்து விவாகரத்தும் செய்திருந்தார். தற்போது 3வதாக நகைகளை டிசைன் செய்யும் கலைஞரான இனஸ் டி ராமன் என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்த நிலையில், இந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக தனது காதலை அறிவித்தார்.

61 year old Brad Pitt and his 32 year old Girl Friend Ine De Ramon photos trending during F1 promotion
Photo Credit:

இளம் காதலியுடன் பிராட் பிட்: வரும் ஜூன் 27ம் தேதி தனது புதிய படமான F1 படத்தின் புரமோஷன் மற்றும் ப்ரீமியர் காட்சிக்கு செல்லும் இடங்கள் என தொடர்ந்து தனது காதலியுடன் பல இடங்களுக்கும் சென்று புரமோஷன் பிசியிலும் காதலியை பிரியாமல் நேரத்தை செலவிட்டு வருவதை பலரும் ஜாலியாகவும் கிண்டலாகவும் கமெண்ட் அடித்து வருகின்றனர். இவர் ஏற்கனவே பிரபல நடிகர் பால் வெஸ்லேவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. அவரை விவாகரத்து செய்து பிரிந்ததில் இருந்து பிராட் பிட் உடன் டேட்டிங் செய்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X