அட கொடுமையே.. 48வது பிறந்தநாளை ஒட்டுத்துணியில்லாமல் கொண்டாடிய பிரபல நடிகை.. மகளோட ரியாக்ஷன பாருங்க!
சென்னை: பிறந்தநாளில் பிரபல நடிகை நிர்வாண போஸ் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
பிரபலங்கள் என்ன செய்தாலும் அந்த விஷயம் பிரபலமாகி விடுகிறது. இதனால் பிறந்த நாளை கூட வித்தியாசமாக கொண்டாடி வருகிறார்கள் பிரபல நடிகர் நடிகைகள்.
அண்மையில் நாகினி சீரியல் நடிகை ஒருவர் ஆண் உறுப்பு டிசைனில் இருந்த கேக்கை வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

கழுவி ஊற்றினர்
அந்த வீடியோ பெரும் வைரலானது. அதனை பார்த்த நெட்டிசன்கள் கேவலமான ரசனை என அவரை கழுவி ஊற்றினர். இந்நிலையில் ஹாலிவுட்டில் பிரபலமான நடிகை ஒருவர் ரொம்பவே வித்தியாசமான முறையில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

நிர்வாண போஸ்
அதாவது பிறந்த நாளில் உடம்பில் ஒட்டுத்துணிக் கூட இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்து அந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார் அந்த பிரபல நடிகை. அந்த பிரபல நடிகை வேறு யாரும் இல்லை, ஆஸ்கர் விருது வென்ற கிவினெத் பால்ட்ரோ தான்.

48வது பிறந்தநாள்
கிவினெத் பால்ட்ரோ ஆஸ்கர் விருது, கோல்டன் குளோப் விருது, கிராமி விருது என ஏராளமான விருதுகளை குவித்துள்ளார். அவெஞ்சர்ஸ் சீரிஸ் படங்கள், அயர்ன் மேன் சீரிஸ் படங்களில் லீடிங் ரோலில் நடித்துள்ளார் கிவினெத் பால்ட்ரோ. இந்நிலையில் கிவினெத் நேற்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடினார்.

பிறந்தமேனிதான்
இதனை முன்னிட்டு சமூக வலைதளங்களில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தனது பிறந்தநாளை ஒட்டுத் துணியில்லாமல் கொண்டாடியுள்ளார் நடிகை கிவினெத். அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும், தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி என்றும் பிறந்தமேனிதான் என் பிறந்தநாள் உடை என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார்.

கொல்றீங்க
அவரது போட்டோவையும் வீடியோவையும் பார்த்த அவரது மகள் நீங்கள் கொல்றீங்க அம்மா என கமெண்ட் பதிவிட்டுள்ளார். விவாகரத்தான கிவினெத் பால்ட்ரோ, கடந்த 2018ஆம் ஆண்டுதான் பிரபல தயாரிப்பாளரான பிராட் ஃபால்சக்கை திருமணம் செய்துக் கொண்டார். அவரது தி கூப் லேப் வெப் சீரிஸ் நெட்ஃபிளிக்ஸில் வைரலாகி ரிலீஸ் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











