15 வயது முதல் 51 வயது வரை.. 21 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பிரபல ஆபாச பட நடிகர்.. பகீர் புகார்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஆபாச பட நடிகர் 21 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக பகீர் புகார் எழுந்துள்ளது.

சினிமாத் துறையில் உள்ள பெண்கள் பாலியல் தொல்லைக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாவது தொடர் கதையாகி வருகிறது.

சினிமா மோகத்தில் அத்துறையில் உள்ள நபர்களால் பல பெண்கள் வாழ்க்கையை சீரழித்து கொள்வதும் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை காலம் காலமாக அரங்கேறி வருகிறது.

நியூயார்க்கில் மீடூ இயக்கம்

நியூயார்க்கில் மீடூ இயக்கம்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதற்காக 2006-ல் ஆப்ரிக்க வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கப் பெண் சமூக செயற்பாட்டாளர் தரானா, நியூயார்க்கில் மீ டூ என்ற இயக்கத்தைத் தொடங்கினார். இதனை தொடர்ந்து 2017 அக்டோபர் 10-ம் தேதி மீ டூ, ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலானது.

தொடரும் பாலியல் புகார்கள்

தொடரும் பாலியல் புகார்கள்

அப்போது ஹாலிவுட் சினிமா தயாரிப்பாளர் ஹார்வி வெய்னஸ்டேய்ன் மீது 80-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து அவர் மீதான புகார் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் என உலகம் முழுவதும் மீ டூ புகார்கள் குவிந்தன.

21 பெண்கள் பாலியல் வன்கொடுமை

21 பெண்கள் பாலியல் வன்கொடுமை

இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் மீண்டும் பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆபாச பட நடிகர் ரோன் ஜெர்மி. இவர் 21 பெண்களை பாலியல் வன் கொடுமை செய்துள்ளதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜெரிமி 1970 ஆம் ஆண்டு முதல் 1700க்கும் மேற்பட்ட எக்ஸ் ரேட்டட் படங்களில் நடித்துள்ளார்.

3 பெண்கள் பாலியல் வன் கொடுமை

3 பெண்கள் பாலியல் வன் கொடுமை

இந்த அடல்ட் இண்ட்ஸ்ட்ரியில் பல ஆண்டுகளாக பல்வேறு புகார்களுக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் ஆளாகி வருகிறார் ஜெர்மி. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் ஒருவரை பாலியல் ரீதியாக தாக்கி துன்புறுத்தியதாகவும் அவர் மீது லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஜெர்மி பாலியல் பலாத்காரம்

ஜெர்மி பாலியல் பலாத்காரம்

இந்நிலையில் அவர் மீது புதிய குற்றச்சாட்டுக்களை அரசு தரப்பு வழக்கறிஞர் கடந்த புதன்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் 1996ஆம் ஆண்டுக்கு முந்தையவை என்றும், 15 வயது முதல் 51 வயது வரையிலான 21 பெண்களை நடிகர் ஜெர்மி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.

68 வயதான நடிகர் ஜெர்மி

68 வயதான நடிகர் ஜெர்மி

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட ஜெர்மி தான் ஒரு "நிரபராதி" என்று கூறினார். மேலும் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஜெர்மி மறுத்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.

68 வயதான ஜெர்மியின் உண்மையான பெயர் ரொனால்ட் ஜெர்மி ஹயாட்.

ட்ரேட்மார் மீசை

ட்ரேட்மார் மீசை

இவர் "டீப் த்ரோட் II" மற்றும் "ஜான் வெய்ன் பாபிட் அன் கட்" உள்ளிட்ட அடல்ட் திரைப்படங்களில் தோன்றினார்.

ட்ரேட்மார்க் மீசையுடன் பெரும் பிரபலமாக ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டார். ஆனால் அவர் நீண்ட காலமாக பாலியல் குற்றச்சாட்டுகளால் திணறி வருகிறார். மேலும் சமீப காலமாக இன்டஸ்ட்ரி கழ்வுகளில் இருந்து அவர் தடை செய்யப்பட்டார்.

ரான் பலாத்காரம் செய்பவர் அல்ல

ரான் பலாத்காரம் செய்பவர் அல்ல

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜெர்மிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட பிறகு, அவரது வழக்கறிஞர் ஸ்டூவர்ட் கோல்ட்ஃபார்ப் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து, தனது வாடிக்கையாளர் " பாலியல் வன்கொடுமை செய்பவர் அல்ல" என்று வலியுறுத்தினார். மேலும் பல வருடங்களாக ரான் யார் என்பதன் காரணமாக - 4,000 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அவர் ஒரு முக்கியமானவராக இருந்தார்.

பெண்கள்தான் அவர்களை அள்ளிக்கொடுத்தார்கள்

பெண்கள்தான் அவர்களை அள்ளிக்கொடுத்தார்கள்

மேலும் அவர் பாலியல் வன்கொடுமை செய்பவர் என்று குற்றம் சாட்டுவது அநியாம். பெண்கள்தான் அவர்களை அவரிடம் அள்ளிக்கொடுத்தார்கள் என்றும் ஜெர்மியின் வழக்கறிஞர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 2017ஆம் ஆண்டு மீடு இயக்கம் தொடங்கப்பட்டதில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸில் எண்டெர்டெய்ன்மென்ட் இன்டஸ்ட்ரியில் இருந்து பாலியல் வழக்கில் விசாரிக்கப்படும் ஒரு முக்கிய நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X