twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா நேரத்தில் தொடங்கிய ஷூட்டிங்கில் பயங்கர விபத்து.. ரூ.20 கோடி செட் நாசம்.. படக்குழு அதிர்ச்சி

    By
    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: மிஷன் இம்பாசிபிள் 7 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ரூ.20 கோடி செலவில் போடப்பட்ட செட் நாசமானது.

    டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற பிரமாண்ட ஆக்‌ஷன் படம் 'மிஷன் இம்பாசிபிள்'.

    இந்தப் படங்களின் வரிசையில் இதுவரை ஆறு பாகங்கள் வெளியாகி இருக்கின்றன. 2018 ஆம் ஆண்டு வெளியான மிஷன் இம்பாசிபிள்: ஃபால் அவுட் படம் உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றது.

    தமிழா தமிழா நாளை நம் நாளே.. சுதந்திர தீயை வளர்த்த ஏ.ஆர். ரஹ்மானின் தேசப்பற்று பாடல்கள் இதோ!தமிழா தமிழா நாளை நம் நாளே.. சுதந்திர தீயை வளர்த்த ஏ.ஆர். ரஹ்மானின் தேசப்பற்று பாடல்கள் இதோ!

    கிறிஸ்டோபர் மெக்குயர்

    கிறிஸ்டோபர் மெக்குயர்

    இதனால் இந்தப் படப்படத்தை கிறிஸ்டோபர் மேக்குயரீயிடமே அடுத்த இரண்டு பாகங்களை இயக்கும் பொறுப்பை பாராமவுண்ட் நிறுவனம் வழங்கியுள்ளது. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்குள், மிஷன் இம்பாசிபிள் படத்தின் அடுத்த பாகங்களின் ஷூட்டிங்கை முடித்து 2021 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி, 7 ஆம் பாகத்தையும் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி 8 ஆம் பாகத்தையும் வெளியிட முடிவு செய்திருந்தது.

    தள்ளி வைக்கப்பட்டது

    தள்ளி வைக்கப்பட்டது

    ஆனால், இந்த திட்டத்தை கொரோனா மொத்தமாக மாற்றிவிட்டது. இதையடுத்து மிஷன் இம்பாசிபிள் 7 படம், 2021 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதியும், 8 ஆம் பாகம் 2022 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதியும் வெளியாகும் என்று பாராமவுண்ட் அறிவித்தது.

    தீப்பொறி பரவி விபத்து

    தீப்பொறி பரவி விபத்து

    இந்தப் படத்தின் படப்பிடிப்புக் குழு தங்கி படப்பிடிப்பைத் தொடர, கொரோனா இல்லாத கிராமம் ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளதாக படக்குழு கடந்த சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தது. 7 மாதங்களாக தடைபட்ட இதன் ஷூட்டிங் சமீபத்தில் இங்கிலாந்தில் மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் செட்டின் தீபிடித்தது. இதன் காரணமாக ரூ.20 கோடியில் போடப்பட்ட செட் நாசமானதாகக் கூறப்படுகிறது.

    ரூ.20 கோடி நஷ்டம்

    ரூ.20 கோடி நஷ்டம்

    'ஆக்‌ஷன் காட்சிக்காக சிறப்பு செட் ஒன்று போடப்பட்டிருந்தது. ஸ்டன்ட்மேன் ஒருவர் பைக்கில் வருவதுபோன்ற காட்சியை படமாக்கும்போது பைக்கில் இருந்து தீப்பொறி பரவி விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயமில்லை என்றாலும் பெருத்த பொருட் செலவு ஏற்பட்டுள்ளது. இதனால் படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோவுமான டாம் க்ரூஸ் விரக்தி அடைந்துள்ளார்.

    பிரமாண்ட செட்

    பிரமாண்ட செட்

    ஏற்கனவே படம் தாமதமாகி வரும் நிலையில் இந்த விபத்து படத்தை மேலும் தாமதமாக்கி உள்ளது' என்று படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த தீவிபத்தால், ரூ.20 கோடி மதிப்புள்ள அமைக்கப்பட்ட பிரமாண்ட செட் வீணாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    A motorcycle accident brought production on Mission Impossible 7 to a halt, and damaged a set reportedly worth $2.6 million, according to reports.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X