மன்றோவி்ன் போதை பழக்கம்-பகீர் வீடியோ ரிலீஸ்!

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீடியோ எடுக்கப்பட்டதாம்.
இந்தப் படத்தை சமீபத்தில் 2 லட்சத்து 750 ஆயிரம் டாலருக்கு ஏலத்தில் எடுத்தாராம் அமெரிக்காவைச் சேர்ந்த மார்கன். இவர் மன்றோ குறித்த டாக்குமென்டிரியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
நியூஜெர்சியில் ஒருவரிடம் இந்த வீடியோ படம் இருந்ததாம். 1958 அல்லது 1959ம் ஆண்டு மன்றோ கலந்து கொண்ட ஒரு பார்ட்டியின்போது இது எடுக்கப்பட்டதாம்.
இந்த வீடியோவில் மன்றோ படு ஜாலியாக காணப்படுகிறார். விருந்தில் கலந்து கொண்டவர்களுடன் ஹாயாக பேசியபடி புகைக்கிறார். ஒரு கட்டத்தில் தனது அக்குளை மோர்ந்து பார்த்து வாய் விட்டுச் சிரிக்கிறார்.
மன்றோவின் அதிகம் அறியப்படாத தனிப்பட்ட வாழ்க்கையை இது பிரதிபலி்ப்பதாக கூறுகிறார் மார்கன்.
இந்த வீடியோவை எடுத்த நபர் இன்னும் உயிருடன் இருக்கிறார். அவர்தான் மன்றோ புகைப்பது கஞ்சா என்று தெரிவித்தாராம்.
1962ம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார் மன்றோ என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











