twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டூப் இல்லாமல் சாகசக்காட்சிகள்?...ஹாலிவுட் ஸ்டார் டாம் குரூஸ்-ன் அதிரடி பதில்

    ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் தனது படங்களில் வரும் சாகசக்காட்சிகளை ரசித்து கடந்துபோக வேண்டும், ஆராயக்கூடாது என்று பதிலளித்துள்ளார்.

    |

    கேன்ஸ்: தனது டாப் கன் படத்தை திரையிட கேன்ஸ் படவிழாவுக்கு வந்துள்ள ஹாலிவுட் ஆக்டர் டாம் குரூஸ் பல்வேறு கேள்விகளுக்கு அதிரடியாக பதில் அளித்துள்ளார். ஆக்‌ஷனை ரசிக்கணும், ஆராயக்கூடாது என பதிலளித்துள்ளார்.

    தான் நடிக்கும் படங்களில் விமானம் ஓட்டுவது, உயரமான கட்டிடங்களில் தாவுவது, பைக் சாகசம் என டூப் போடாமல் நடிப்பவர் டாம் குரூஸ்.

    இவரது மிஷன் இம்பாசிபிள் பட வரிசைகள் அத்தனையும் ரசிகர்களை கவர்ந்த ஒன்று. இது தவிர டாப் கன், சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்களிலும் நடித்துள்ளார்.

    முழுதாக செம்பியாக மாறிய கோவை சரளா... பிரபு சாலமன் இயக்கத்தில் காமெடி குயின்! முழுதாக செம்பியாக மாறிய கோவை சரளா... பிரபு சாலமன் இயக்கத்தில் காமெடி குயின்!

    உயிரை பணையம் வைத்து சாகசம்...அதுதான் டாம் குரூஸ்

    உயிரை பணையம் வைத்து சாகசம்...அதுதான் டாம் குரூஸ்

    ஹாலிவுட் திரைப்படங்களில் சண்டை மற்றும் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இல்லாமல் தானாகவே அனைத்தையும் பயிற்சி பெற்று நடிப்பவர் ஹாலிவுட் ஸ்டார் டாம் குரூஸ். உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் ஸ்டண்ட் காட்சிகளில் தனது சொந்த ஸ்டண்ட்களை தானே துணிந்து செய்பவர் டாம் குரூஸ். கேன்ஸ் படவிழாவுக்கு வந்த டாம் குரூஸுக்கு மிகப்பெரிய அளவில் மரியாதை தரப்பட்டது. வானில் விமானத்தில் வண்ண புகை மூலம் மூலம் அவருக்கு மரியாதை செலுத்தினர்.

    ஐந்து நிமிட ஹானர் நெகிழ்ந்துப்போன டாம்

    ஐந்து நிமிட ஹானர் நெகிழ்ந்துப்போன டாம்

    பார்வையாளர்கள், செலிபிரிட்டிகள் 5 நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டியப்படியே இருந்தனர், இதனால் நெகிழ்ந்துப்போன டாம் குரூஸ் கண்களில் கண்ணீர் வழிந்தது. டாம் குரூஸ் தனது 19 வது வயதில் நடிக்க வந்தார். 1981 ஆம் ஆண்டு முதல் சில படங்களில் நடித்து வந்தாலும் டாப் கன்(1986) அவரை புகழின் உச்சிக்கு கொண்டுச் சென்றது. அதன் பின்னர் மிஷன் இம்பாசிபிள் படங்களின் மூலம் பெரும் புகழ் பெற்றார். அதில் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் நடித்த அவரது திறமை உலக அளவில் பெரிதாக அவரை அடையாளம் காட்டியது.

    அதிரடி சரவெடி ஒரிஜினல் ஸ்டண்ட் அதுதான் டாம் குரூஸ்

    அதிரடி சரவெடி ஒரிஜினல் ஸ்டண்ட் அதுதான் டாம் குரூஸ்

    மிஷன் இம்பாசிபிள் படங்களின் பாகங்களான ஃபால்அவுட், குருஸ்'ஸ் ஈதன் ஹண்ட் போன்ற படங்கள் டாம் குரூஸை புதிய உச்சத்திற்கு கொண்டுச் சென்றது. விமானத்தில் நின்றபடி பயணம், மோட்டார் சைக்கிளில் ஹெலிகாப்டர் ஓட்டுவது, சிறிய விமானத்தை ஓட்டுவது, ரியல் சேஸிங், கார் சேஸிங், பில்டிங் விட்டு பில்டிங் தாவுவது (கடைசியாக மிஷன் இம்பாசிபிள் படத்தில் இவ்வாறு தாவும்போது நூழிலையில் மிஸ்ஸாகி முட்டியில் அடிபட்டு அப்படியே ஓடுவார். இந்தக்காட்சி படத்தில் அப்படியே இருக்கும்)

    நிஜமான போர் விமானத்தை பயன்படுத்தியுள்ள 'டாப்கன் மேவரிக்

    நிஜமான போர் விமானத்தை பயன்படுத்தியுள்ள 'டாப்கன் மேவரிக்" படம்

    மிஷன் இம்பாசிபிள் - ஃபால்அவுட்டின் தொடர்ச்சி, இப்போது மிஷன் இம்பாசிபிள் - டெட் ரெக்கனிங் பார்ட் I எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் உயிரை பணயம் வைக்கும் ஸ்டண்ட் காட்சிகளை குரூஸ் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது கேன்ஸ் பட விழாவில் டாப் கன் மேவரிக் படத்தை டாம் குரூஸ் திரையிட்டுள்ளார், குரூஸின் டாப் கன்(1986)ன் ஆக்‌ஷன்-படத்தின் தொடர்ச்சியாக வந்துள்ள இரண்டாம் பாகம் இது, இதில் மலைக்குன்றின் மீதிருந்து மோட்டார் சைக்கிளில் டாம் குரூஸ் செய்யும் சாகசம் நிஜ-உலக ஸ்டண்ட்களில் குரூஸின் அர்ப்பணிப்பைக் காட்டுவாதாக அமைந்துள்ளது. பல விமான சாகச காட்சிகளுக்கு உண்மையான போர் விமானங்களை படத்தில் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    என்னிடம் ஏன் இந்த கேள்வியை கேட்கிறீர்கள்...டாம் குரூஸ்

    என்னிடம் ஏன் இந்த கேள்வியை கேட்கிறீர்கள்...டாம் குரூஸ்

    'டாப் கன் மேவரிக்' திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்னதாக "மாஸ்டர் கிளாஸ் தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் என்கிற அந்த செய்தியாளர் சந்திப்பில் டாம் குரூஸ் ஸ்டண்ட் காட்சிகளில் எப்படி அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார் என்கிற கேள்விக்கு தனது திரைப்படங்களின் ஸ்டண்ட் காட்சிகளில் தானே சுயமாக தன்னம்பிக்கையுடன் ஸ்டண்டுகளை செய்வது பற்றி சுட்டிக்காட்டி பேசினார். அது எனது தொழிலில் ஒரு பகுதி அதற்காக நானே ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் நடிக்கிறேன்" பிரபல நடனக்கலைஞர் ஜீன் கெல்லியிடம், 'நீங்கள் உங்கள் படத்தில் நீங்களே நடனமாடுவீர்களா? என்று கேட்பது போல் உள்ளது உங்கள் கேள்வி என்று தெரிவித்தார்.

    ரசித்துப்பார்...கடந்து போ...டாம் குரூஸ்

    ரசித்துப்பார்...கடந்து போ...டாம் குரூஸ்

    டாம் குரூஸ் அடுத்த பத்தாண்டுகளில் ரசிகர்களுக்காக என்னென்ன மெனக்கிடல்களை அளிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், அவரது சமீபத்திய பேட்டிகளில் டாம் குரூஸ் ரசிகர்களுக்கு சொல்வது தனது படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் யார் செய்வது என்பது ஒருபுறமிருக்க பார்ப்பவர்கள் அதை ரசித்து கடந்துச் செல்ல வேண்டும், அது எப்படி எடுக்கப்பட்டது என்கிற ஆராய்ச்சிக்குள் போகவேண்டாம் என தெரிவித்துள்ளார்.

    English summary
    tom cruise said, stunt work is very much a part of who he is and that spectators should simply go along for the trip instead of questioning "Why?"
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X