தவறான பாதையில் சைக்கிள் ஓட்டிய ஹாலிவுட் நடிகர் அலெக் பால்ட்வின் கைது!

By Shankar

Actor Alec Baldwin arrested after riding bike wrong way
நியூயார்க்: ஹாலிவுட்டின் பிரபல நடிகர் அலெக் பால்ட்வின் தவறான பாதையில் சைக்கிள் ஓட்டியதற்காகவும் முன்னுக்குப் பின் முரணாக நடந்து கொண்டதற்காகவும் கைதாகி விடுதலையானார்.

நேற்று நியூயார்க் நகரின் தெருவொன்றில் தவறான பாதையில் சைக்கிள் ஓட்டியுள்ளார் பால்ட்வின், தடுத்து நிறுத்தி, அவரது அடையாள அட்டையைக் கேட்ட போலீசாரிடம் மோசமாக நடந்து கொண்டாராம்.

இதைத் தொடர்ந்து அவரை கைவிலங்கு போட்டு அழைத்துச் சென்றனர் போலீசார். ஏற்கெனவே இவர் கடும் ட்ராப்பிக்கில் எதிர்திசையில் பைக் ஓட்டியதற்காக குற்றம் சாட்டப்பட்டிருப்பதால், இரண்டு சம்மன்கள் அவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டன.

இந்த வழக்குகளில் அவர் வரும் ஜூலை 24-ம் தேதி ஆஜராக வேண்டும்.

சில மணி நேரங்களில் போலீஸ் அவரை விடுதலை செய்தது. உடனடியாக டிவிட்டரில், நியூயார்க் போலீஸ் முட்டாள்தனமாக நடந்து கொள்வதாகவும், மோசமாக நிர்வாகத்தின் கீழ் உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

தன்னைக் கைது செய்த போலீசாரிடம், "உங்களுக்கு என்ன வயது.. எத்தனை ஆண்டுகளாக இங்கிருக்கிறீர்கள்? நான் யார் என்று கூடத் தெரியாதா?" என்று கேள்வி எழுப்பினாராம் பால்ட்வின்.

பால்ட்வினும் சர்ச்சையும் ஒட்டிப் பிறந்தவர்கள் மாதிரிதான். பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்களைத் தாக்கியதாக ஏற்கெனவே மூன்று முறை சர்ச்சைக்குள்ளானவர் பால்ட்வின்.

பியர்ல் ஹார்பர், தி கூலர், 30 ராக், தி ஏவியேட்டர் உள்பட பல படங்களிலும் டிவி தொடர்களிலும் நடித்திருப்பவர் பால்ட்வின்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X