கிரீஸ், ஸ்டார் டஸ்ட் படங்களில் நடித்தவர்... பிரபல ஹாலிவுட் நடிகர் காலமானார்

By

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் எட் பைனஸ் (Edd Byrnes)காலமானார். அவருக்கு வயது 87.

ஹாலிவுட் நடிகர் எட் பைனஸ், ரெட் பிளட் யெல்லோ கோல்ட், ஸ்டார் டஸ்ட், கிரீஸ், பேக் டு த பீச், பார்டி லைன், ட்ரூப் பேவர்லி ஹில்ஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

Actor Edd Byrnes, Known For “Grease” And “77 Sunset Strip,” Dies

1960 களில் வெளியான, 77 சன்செட் ஸ்டிரிப் என்ற டிவி புலனாய்வு தொடர் முலம் பிரபலமான இவர், தொடர்ந்து படங்களிலும் டிவி தொடர்களிலும் நடித்து வந்தார்.

அவர் நடித்த தொடர்களின் மூலம் அவருக்கு பெரும் புகழ் கிடைத்தது. வாரத்துக்கு 15 ஆயிரம் கடிதம் வரும் அளவுக்கு அவர் புகழ்பெற்றிருந்தார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சான்டா மோனிகாவில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்துவந்த இவர், கடந்த புதன்கிழமை காலமானார். இதை அவரது மகன் லோகன் தெரிவித்துள்ளார்.

எட் பைனஸ் மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X