மிரட்டும் கொரோனா.. மருந்தது கண்டுபிடித்தால் ரூ. 1 கோடி பரிசு.. பிரபல நடிகர் அதிரடி அறிவிப்பு!

Recommended Video

கொரோனாவுக்கு தடுப்பூசி... இந்தியர் தலைமையில் முயற்சி

சென்னை: கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு தருவதாக பிரபல நடிகர் அறிவித்துள்ளார்.

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவ தொடங்கியது கொரோனா வைரஸ். கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் முதலில் லேசனா சளி, இருமல் என தொடங்கும்.

பின்னர் கடுமையான உடல் வலியை கொடுத்து இறுதியில் உயிரையே குடித்துவிடும் இந்த கொரோனா வைரஸ். சீனாவில் தொடங்கிய இந்த நோய் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

நேரம் காலம் பார்க்காமல்

நேரம் காலம் பார்க்காமல்

கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சீனாவில் மட்டும் ஆயிரத்தை தொட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீன மருத்துவர்களும் செவிலியர்களும் நேரம் காலம் பார்க்கமால் நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வெறிச்சோடிய தெருக்கள்

வெறிச்சோடிய தெருக்கள்

கொரோனா வைரஸை கண்டுபிடித்த 34 வயதான இளம் மருத்துவர் அண்மையில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானார். மருத்துவரே உயிரிழந்ததால் மக்களுக்கு நோயின் மீதான அச்சம் அதிகரித்துள்ளது. சீன மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன. அதேநேரத்தில் சீனாவின் பல நகரங்கள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

சீன ஆராய்ச்சியாளர்கள்

சீன ஆராய்ச்சியாளர்கள்

உலக நாடுகள் பலவும் சீனாவில் உள்ள தங்களின் குடி மக்களை தனி விமானம் மூலம் அழைத்து வருகின்றன. அழைத்து வரப்படும் மக்களும் தனியாகவே வைத்து கண்காணிக்கப்படுகின்றனர். உயிரை கொல்லும் அரக்கனான கொரோனாவை அழிக்க மருந்து கண்டுப்பிடிக்கும் பணியில் சீன ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஒரு கோடி பரிசு

ஒரு கோடி பரிசு

ஆனாலும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் மருந்து கண்டுப்பிடிக்கும் விவகாரத்தில் உலக நாடுகளின் உதவியை நாடியுள்ளது சீனா. இந்நிலையில் கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுப்பிடித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என பிரபல நடிகரான ஜாக்கிஜான் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே நன்கொடை

ஏற்கனவே நன்கொடை

இதுதொடர்பாக நடிகர் ஜாக்கிஜான் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொரோனாவுக்கு விரைவில் மருந்து கண்டுபிடிக்க முடியும் என்று தான் நம்புவதாகவும், அவ்வாறு கண்டுபிடிக்கும் தனிநபர் அல்லது அமைப்பிற்கு நன்றி சொல்லும் விதமாக ஒரு கோடி ரூபாய் பரிசளிக்க உள்ளதாகவும் அறிவித்திருக்கிறார். ஏற்கனவே மாஸ்க் போன்ற பாதுகாப்பு உபகரணங்களுக்காக ஜாக்கி சான் நன்கொடை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X