கொரோனா பாதிப்பு.. தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகரின் வலதுகால் துண்டிப்பு..மனைவி அதிர்ச்சி!

By

லாஸ் ஏஞ்சல்ஸ்: கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகரின் வலது கால் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட் படமான 'பிராட்வே'-யில் நடித்தவர் நிக் கோர்டரோ. இன்னும் சில படங்களில் நடித்துள்ளார்.

புளு பிளட்ஸ், லா அண்ட் ஆர்டர் உட்பட பல டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

வென்டிலேட்டர்

வென்டிலேட்டர்

கடந்த 31 ஆம் தேதி இவர் திடீரென மயங்கி விழுந்ததை அடுத்து, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மருத்துவனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்னை ஏற்பட்டது. வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ரத்தக்கசிவு

ரத்தக்கசிவு

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக, அவரது வலது காலில் ரத்தம் உறைந்தது. இதனால் கால் விரல்களுக்கு ரத்தம் வரவில்லை. இதற்கும் மருத்துவர்கள் தீவிரச் சிகிச்சை அளித்தனர். பின்னர் இதன் காரணமாக உடலுக்குள் ரத்த கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அமண்டா கூட்ஸ்

அமண்டா கூட்ஸ்

இதனால் வலது காலை துண்டிக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் அவர் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது வலது கால் துண்டிக்கப்பட்டுள்ளது. இப்போது நலமுடன் இருக்கிறார், இதை நடிகர் நிக் கோர்டரோவின் மனைவி அமண்டா கூட்ஸ் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

Recommended Video

அடுத்த 20 நாட்கள் ரொம்ப முக்கியம்.. கொரோனாவில் இருந்து தப்பிக்க.. விவேக் சொல்லும் ஆசமான ஐடியா!
ஹாலிவுட் நடிகர்கள்

ஹாலிவுட் நடிகர்கள்

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். மூத்த நடிகர்கள் சிலர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமாகப் போராடி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X