ஜேம்ஸ் பாண்ட் பட நடிகர் சீன் கானரி காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி!
சென்னை: ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகரான சீன் கானரி காலமானார். அவருக்கு வயது 90.
நடிகர் சீன் கானரி ஸ்காட்லாந்தின் ஃபவுண்டைன் நகரில் 1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி பிறந்தார்.
1954 ஆம் ஆண்டு Lilacs in the Spring - என்ற படத்தில் அன்கிரெடிட்டட் ரோலில் நடித்தார் சீன் கானரி.

ஒரே ஆண்டில்..
அதன்பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த சீன் கானரி, 1957ஆம் ஆண்டு நோ ரோடு பேக், ஹெல் டிரைவர்ஸ், ஆக்ஷன் ஆஃப்தி டைகர், டைம் லாக் என ஒரே ஆண்டில் அடுத்தடுத்து 4 படங்களில் நடித்தார்.

ஜேம்ஸ் பாண்ட்
அதன் பிறகு ஏறு முகம்தான் சீன் கானரிக்கு. ஏராளமான படங்களில் நடித்துள்ள சீன் கானரி, புகழ்பெற்ற ஜேம்ஸ்பாண்ட் கதாப்பாத்திரத்தில் முதல் முதலில் நடித்த நடிகர் இவர் தான்.

நெவர் சே நெவர் அகைன்
ஜேம்ஸ் பாண்ட் கதாப்பத்திரத்தில் வெளியான டாக்டர் நோ, ஃபிரம் ரஷ்யன் வித் லவ், கோல்டு ஃபிங்கர், தண்டர் பால். யூ ஒன்லி லிவ் டுவைஸ், டைமண்ட்ஸ் ஆர் ஃபார எவர், நெவர் சே நெவர் அகைன் ஆகிய 7 படங்களில் நடித்துள்ளார்.

விருதுகளை குவீத்த கானரி
இந்த படங்கள் அனைத்து பெரும் பிரபலமானவை. புகழ் பெற்ற நடிகரான சீன் கானரி, ஆஸ்கர், பாஃப்தா எனும் பிரிட்டிஷ் அகாடமி விருதுகள், மற்றும் கோல்டன் குளோப் விருதுகள் என பல முக்கிய விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

திரையுலகம் சோகம்
கடந்த ஆகஸ்ட் மாதம் தனது 90 வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில்உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலமானார். அவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











