»   »  குழந்தைகளின் ஆயாக்களுடன் ஹாயாக இருந்த பிரபல நடிகர்கள்

குழந்தைகளின் ஆயாக்களுடன் ஹாயாக இருந்த பிரபல நடிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஹாலிவுட் நடிகர்களில் பென் அப்லெக், ஆர்னால்ட் ஸ்வார்ஸ்நெக்கர் உள்ளிட்டோர் தங்களின் குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் நானிகளுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தனர்.

ஹாலிவுட் நடிகர்களில் சிலர் தங்களின் மனைவிகளுக்கு தெரியாமல் குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் நானிகளுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தனர். அதில் சில நடிகர்கள் தங்களின் கள்ளத்தொடர்பை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

குழந்தைகளை கவனிக்கும் ஆயாக்களுடன் தொடர்பு வைத்திருந்த ஹாலிவுட் நடிகர்களின் விவரம்,

பென் அஃப்லெக்

பென் அஃப்லெக்

பிரபல ஹாலிவுட் நடிகர் பென் அப்லெக் 10வது திருமண நாளை கொண்டாடிய கையோடு மனைவி ஜெனிபர் கார்னரை பிரிந்தார். பென் தனது குழந்தைகளின் நானியான 28 வயது கிறிஸ்டின் ஊஸூனியனுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்திருக்கிறார். இதை அறிந்த ஜெனிபர் கிறிஸ்டீனை வேலையை விட்டு நிறுத்தியுள்ளார்.

அர்னால்ட்

அர்னால்ட்

நடிகர் ஆர்னால்ட் ஸ்வார்ஸ்நெக்கர் தனது வீட்டில் வேலை செய்த மில்ட்ரெட் பட்ரீஷியா பீனாவுடன் கள்ளத்தொடர்பு வைத்து ஒரு குழந்தைக்கும் தந்தை ஆகியுள்ளார். இதை கடந்த 2011ம் ஆண்டு அர்னால்டே ஒப்புக் கொண்டார்.

ஜூட் லா

ஜூட் லா

நடிகர் ஜூட் லா மனைவி மூலமாக 3 குழந்தைகள், 2 காதலிகள் மூலம் 2 குழந்தைகளுக்கு தந்தை ஆனவர். அவர் தன்னுடைய குழந்தையின் நானியுடன் தொடர்பு வைத்ததற்காக தன்னுடைய காதலி சியனா மில்லரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.

ஈத்தன் ஹாக்

ஈத்தன் ஹாக்

நடிகர் ஈத்தன் ஹாக்கும், பிரபல ஹாலிவுட் நடிகை உமா தர்மனும் விவாகரத்து பெறுவதற்கு நடிகர் குழந்தையின் நானியுடன் வைத்திருந்த கள்ளத்தொடர்பு தான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் அதை ஈத்தன் மறுத்தார்.

பிராட் பிட்

பிராட் பிட்

நடிகர் பிராட் பிட் தனது மனைவியும், நடிகையுமான ஏஞ்சலினா ஜூலிக்கு தெரியாமல் நானியுடன் ஜாலியாக இருந்தார் என்றும், ஒரு நாள் அவர் ஜூலியிடம் கையும், களவுமாக சிக்கினார் என்றும் செய்தி வெளியானது. கையும் களவுமாக பிடித்த ஜூலி பிராட் பிட் கன்னத்தில் ஓங்கி பளார்விட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

English summary
It is not strange to see celebrity husbands cheating on their wives. The latest rumour swirling around claiming that Ben Affleck cheated on his wife, Jennifer Garner with their nanny, Christine Ouzounian.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil