செல்ல மகனுடன் ஜாலியாகப் படகில் சென்ற பிரபல நடிகை திடீர் மாயம்..ஹெலிகாப்டர் மூலம் தேடும் போலீசார்!
கலிபோர்னியா: தனது மகனுடன் படகில் சென்ற பிரபல நடிகை திடீரென மாயமாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரபல ஹாலிவுட் நடிகை நயா ரிவேரா. இவர் த மாஸ்டர் ஆப் டிஸ்கியூஸ், ஃபிரான்கன்ஹூட், க்ளீ, அட் த டெவில் டோர், மேட் ஃபேமிலிஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
டிவி சீரியல்களிலும் நடித்துள்ள இவர், சிறந்த பாடகியும் கூட. பல ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார்.

காதல் திருமணம்
இவர், ரியான் டோஸே என்பவரை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜோஸி ஹாலிஸ் என்ற மகன் உள்ளார். 2 வருடங்கள் கழித்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பின்னர் விவாகரத்து பெற்றனர். லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்த நடிகை ரிவேரா, தனது 4 வயது மகனுடன் பிக்னிக் செல்ல முடிவெடுத்தார்.

திடீரென மாயமானார்
இதையடுத்து கலிபோர்னியாவின் வென்சுராவில் உள்ள பிரு ஏரிக்குச் சென்றார். அங்கு ஒரு படகை, நண்பகல் ஒரு மணிக்கு வாடகைக்கு அமர்த்தினார். அந்த படகு ஏரியில் சென்றுகொண்டிருந்தது. ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்குள் அந்தப் படகு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஏரி பராமரிப்பாளர்கள் மற்றொரு படகில் சென்று பார்த்தனர். நடு ஏரியில் அந்த படகு இருந்தது. ஆனால், நடிகையை காணவில்லை. மகன் மட்டுமே இருந்துள்ளான்.
ஸ்விம்மிங் சென்றார்
நயா ரிவேராவுக்கான லைஃப் ஜாக்கெட்டும் படகில் அப்படியே இருந்துள்ளது. அவர் மகன் படகில் தூங்கியபடி இருந்துள்ளான். அவன் உடலில் கவச உடை பொருத்தப்பட்டிருந்தது. போலீசார் அவனிடம் விசாரித்தபோது, 'அம்மா ஸ்விம்மிங் சென்றார், திரும்ப வரவில்லை' என்று கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மாயமான நயா ரிவேராவை போலீசார் நேற்று மாலை முழுவதும் தேடினர்.

கண்டுபிடிக்க முடியவில்லை
ஹெலிகாப்டர், ட்ரோன், நீச்சல் வீரர்கள் மூலம் அவரை தேடும்பணி நேற்று நடந்தது. எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் அவரை தேடும் முயற்சியை கைவிட்ட பாதுகாப்பு படையினர் இன்று மீண்டும் தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர். அவரை எப்படியாவது கண்டுபிடித்து விடுங்கள் என்று போலீசாருக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











