சிறந்த நடிகைக்கான விருதை வாங்கிய கையோடு.. தந்தையின் மரணத்தை கூறி கண்ணீர்விட்ட நடிகை!

லாஸ் ஏஞ்சல்ஸ்: சிறந்த முன்னணி நடிகைக்கான விருதை பெற்ற கையோடு பிரபல நடிகை கண்ணீர் விட்டு அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

73 வது எம்மி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

இதில் ஏராளமான ஹாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விருது நிகழ்ச்சியில் ராயல் டிராமா சீரிஸ்ஸான தி க்ரவுன் சீரிஸ் அதிகளவாக 11 விருதுகளை குவித்தது.

இரண்டாம் எலிசபெத்

இரண்டாம் எலிசபெத்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த தி க்ரவுன் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரிஸ் இதுவரை நான்கு சீசன்களை நிறைவு செய்துள்ளது.

நடிகை ஒலிவியா கோல்மென்

நடிகை ஒலிவியா கோல்மென்

இதன் 5 மற்றும் 6வது சீசன் இந்த சீரிஸின் நிறைவு சீசன்களாக இருக்கும் என தெரிகிறது. இதில் ராணி இரண்டாம் எலிசபெத்தாக நடித்த ஹாலிவுட் நடிகை ஒலிவியா கோல்மென் சிறந்த முன்னணி நடிகைக்கான விருதை பெற்றார்.

சிறந்த நடிகைக்கான விருது

சிறந்த நடிகைக்கான விருது

தி க்ரவுன் சீரிஸின் 3 மற்றும் 4வது சீரிஸ்களில் நடிகை ஒலிவியா கோல்மென் இரண்டாம் எலிசபெத்தாக நடித்தார். அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த கதாப்பாத்திரத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுள்ளார் ஒலிவியா.

கண்ணீர் விட்டு அழுத நடிகை

கண்ணீர் விட்டு அழுத நடிகை

47 வயதான நடிகை ஒலிவியா விருதை பெற்ற கையோடு கண்ணீர் விட்டு அழுதுள்ளார். தான் சிறந்த நடிகைக்கான இந்த விருதை வாங்கும் நேரத்தில் என் அப்பா இங்கிருந்து இதனை பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஆனால் என் அப்பா கொரோனா தொற்றால் மரணமடைந்து விட்டார் என கண்ணீர் சிந்தினார்.

தந்தைக்கு சமர்ப்பணம்

தந்தைக்கு சமர்ப்பணம்

அவர் இருந்திருந்தால் நிச்சயம் சந்தோஷப்பட்டிருப்பார் என்று கூறிய ஒலிவியா, தன்னுடைய விருதை தனது தந்தைக்கு சமர்ப்பித்தார். மேலும் தி க்ரவுன் சீரிஸில் தான் நடித்த காட்சிகளில் ஒவ்வொரு நொடியையும் ரசித்ததாகவும் அடுத்து என்ன என்பதை காண காத்திருக்க முடியாது என்றும் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X