நீங்க பார்த்த பல ஹாலிவுட் நிர்வாண காட்சிகள்.. டூப் போட்டு செஞ்சதுதானாம்?
ஹாலிவுட் படங்களில் நிர்வாண காட்சிகள் இயல்பாக அரங்கேறுவது வழக்கம். ஆனால், நீங்க பார்த்த பல காட்சிகளில், டூப் போட்டு தான் அந்த காட்சியை படமாக்கினார்கள் என்ற விஷயம் உங்களுக்கு தெரியுமா?
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகைகள் என்றாலே முழு நிர்வாணமாக ஈஸியாக நடிப்பவர்கள் என்ற நினைப்பு உலகளவில் பலருக்கும் உண்டு.
கோடிக்கணக்கில் அதற்காக பணம் வாங்குகிறார்கள் என்றும் கேளியாக பேசுவார்கள். ஆனால், சில நடிகைகள், நிர்வாண காட்சிகளில் நடிக்க விருப்பமில்லாமல், டூப் போடுவது குறித்து உங்களுக்குத் தெரியுமா?
ஆமாம், சண்டை காட்சிகளுக்கு மட்டும் தான் டூப் போட வேண்டும் என்ற அவசியமில்லை. அந்த மாதிரியான காட்சிகளுக்கும் டூப் போட்டு நடிக்கலாம்.

கெய்ரா நைட்லி
பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் நடிகை கெய்ரா நைட்லி நடிப்பில் இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான The Aftermath படத்தில் இடம்பெற்றிருந்த நிர்வாண காட்சியில் அவர் நடிக்கவே இல்லையாம். நிர்வாணமாகவும், செக்ஸ் காட்சிகளிலும் நடிப்பது தனக்கு பிடிக்காத ஒன்று என்று தெரிவித்துள்ள கெய்ரா, தனக்கு பதிலாக டூப் போட்டு தான் அந்த காட்சிகளை படமாக்கியதாகவும், அந்த நேரத்தில் வெளியே நின்று தான் டீ குடித்துக் கொண்டிருந்ததாகவும் சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

ஏஞ்சலினா ஜூலி
ஆரம்ப காலத்தில் பல படங்களில் நிர்வாண காட்சிகளில் நடித்துள்ளார் ஹாலிவுட் லேடி சூப்பர்ஸ்டார் ஏஞ்சலினா ஜூலி. ஆனால், அதற்கு பிறகு அவர் நடித்த பல படங்களில் பெரும்பாலும், நிர்வாண காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவிப்பதில்லை. வாண்டட் படத்தில் குளியலறையில் இருந்து முழு நிர்வாணமாக அவர் எழுந்து வரும் காட்சி டூப் போட்டு எடுக்கப்பட்டது தானாம்.

ஸ்லம்டாக் நடிகை
ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இந்திய பெண்ணாக நடித்தவர் ஃப்ரீடா பின்டோ. அதன் பின்னர் அவர் நடிப்பில் வெளிவந்த Immortals படத்தில் ஃப்ரீடா பின்டோவின் நிர்வாண காட்சி இடம் பெற்று இருக்கும். ஆனால், அதில் ஃப்ரீடா நடிக்கவில்லையாம், நிர்வாணமாக நடிக்க ஃப்ரீடா யோசிக்க, அந்த காட்சியை பாடி டபுள் கொண்டு எடுத்துக் கொள்ளலாம் என இயக்குநர் கூறினாராம்.

கேம் ஆஃப் த்ரோன்ஸ்
கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் நாயகி எமிலியா கிளார்கின் பல நிர்வாண காட்சிகள் இடம்பெற்றிருக்கும். ஆனால், எந்தவொரு காட்சியிலும் எமிலியா நடிக்கவில்லை என்ற விஷயம் உங்களுக்குத் தெரியுமா? அவருக்கு பதிலாக, மற்றொரு இங்கிலாந்து நடிகையான ரெபாக்கா வான் க்ளீவ் தான் நடித்தாராம். இந்த விஷயம் வெளியே தெரிந்த நிலையில், ரெபாக்கா மிகவும் பாப்புலர் ஆகியுள்ளார்.

தமிழில்
மாற்றான் படத்தில் காஜல் அகர்வாலுக்கு லிப் கிஸ் கொடுக்கும் காட்சியில் சூர்யா நடிக்கவில்லை. அதற்கு பதில், அந்த காட்சியை சிஜி தொழில்நுட்பம் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகின. மேலும், ஆடை படத்திலும் பல காட்சிகளில் பாடி டபுள் பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், அதுகுறித்த ரகசியத்தை இயக்குநரோ அல்லது அமலா பாலோ இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











