twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அவெஞ்சர்ஸ் எண்ட் கேமுக்கு பிறகு அப்படியொரு பிரம்மாண்ட மிரட்டல்.. ஒரே ஸ்க்ரீனில் 3 ஸ்பைடர்மேன்கள்!

    |

    சென்னை: ஹாலிவுட் ரசிகர்கள் முதல் கோலிவுட் ரசிகர்கள் வரை வெறித்தனமாக ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

    தமிழ், தெலுங்கு, இந்தி என ஏகப்பட்ட இந்திய மொழிகளிலும் ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் திரைப்படம் வெளியாகி மிரட்டி வருகிறது.

    2021ல் பெரிய நடிகர்கள் இல்லாமல் வெற்றி பெற்ற 5 தமிழ் படங்கள்!2021ல் பெரிய நடிகர்கள் இல்லாமல் வெற்றி பெற்ற 5 தமிழ் படங்கள்!

    விமர்சகர்களை அழைத்து சமீபத்தில் படத்தை திரையிட்டு காட்டி ஸ்பாயிலர்களை வெளியிடக் கூடாது என கண்டிஷன் போட்ட நிலையில், இதுவரை ஸ்பைடர்மேன்களாக நடித்த மூன்று ஹீரோக்களும் இந்த படத்தில் ஒன்று சேர்ந்து மிரட்டும் காட்சிகளை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் ஸ்பாயில் பண்ணி ஒட்டுமொத்த ஸ்பைடர்மேன் ரசிகர்களையும் தியேட்டர் பக்கம் ஓட விட்டு வருகின்றனர்.

    ரசிகர்கள் எதிர்பார்ப்பு

    ரசிகர்கள் எதிர்பார்ப்பு

    ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படத்தின் அறிமுக டீசர் வெளியான போதே டாக்டர் ஆக்டோபஸை பார்த்த ரசிகர்கள் க்ரீன் காப்லின் குரலை கேட்ட ரசிகர்கள் "என்னடா ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படம் மல்டிவர்ஸ் கான்செப்ட்டில் இப்படி உருவாக்கப்பட்டுள்ளதே.. அப்போ டாபி மாகுயிர், ஆண்ட்ரு கார்ஃபீல்ட் ஸ்பைடர்மேன்கள் எல்லாம் வருவார்களா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது.

    பீட்டர் 1, பீட்டர் 2, பீட்டர் 3

    பீட்டர் 1, பீட்டர் 2, பீட்டர் 3

    மல்டிவர்ஸ் என்பது மல்டி யூனிவர்ஸ் சமீபத்தில் மார்வெல் தயாரிப்பில் வெளியான லோகி வெப்சீரிஸில் இந்த மல்டிவர்ஸ் கான்செப்ட் விரிவாக காட்டப்பட்டது. பெண் லோகி உள்பட ஏகப்பட்ட லோகிக்களை ரசிகர்கள் பார்த்து வியக்க அதே போல ஸ்பைடர்மேன் நோ வே ஹோமில் முதல் ஸ்பைடர்மேன் டாபி மாகுயிர், இரண்டாம் ஸ்பைடர்மேன் ஆண்ட்ரு கார்ஃபீல்ட் மற்றும் தற்போதைய ஸ்பைடர்மேன் டாம் ஹாலண்ட் என மூவரும் இணைந்து மிரட்டும் காட்சிகள் ரசிகர்களை பிரம்மிப்ப்பின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது.

    டாபி மாகுயிர்

    டாபி மாகுயிர்

    இயக்குநர் சாம் ரைமி இயக்கத்தில் டாபி மாகுயிர் பீட்டராகவும் ஸ்பைடர் மேனாகவும் நடித்து 2002ம் ஆண்டு வெளியான முதல் ஸ்பைடர் மேன் திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. முதல் பாகத்தில் க்ரீன் காப்ளினை துவம்சம் பண்ண டாபி மாகுயிர் இரண்டாம் பாகத்தில் ஆக்டோபர்ஸ் உடன் சண்டை போட்டார். அந்த ரயில் காட்சிகள் எல்லாம் இப்போதும் ரசிகர்களுக்கு கூஸ் பம்ப்ஸ் கொடுக்கும் காட்சிகள் தான். மூன்றாம் பாகத்தில் பிளாக் ஸ்பைடியாக நடித்து மிரட்டிய டாபி மாகுயிர் அதன் பிறகு ஸ்பைடர் மேன் படத்தில் இருந்து மாற்றப்பட்ட நிலையில், மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளது சர்ப்ரைஸ் பேக்கேஜ்.

    எண்ட்கேம் வசூலை முறியடிக்குமா

    எண்ட்கேம் வசூலை முறியடிக்குமா

    அயன்மேன், தோர், ஹல்க், கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர்மேன் என ஒவ்வொரு சூப்பர் ஹீரோக்களை உருவாக்கி அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் தானோஸை துவம்சம் செய்ய ஒட்டுமொத்த சூப்பர் ஹீரோக்களும் ஒன்று திரண்டு திரையில் அணிவகுக்க அவதார் வசூலை மிஞ்சி எண்ட்கேம் முதலிடத்தை பிடித்துள்ளது. எண்ட்கேம் வசூல் சிம்மாசனத்துக்கு ஒரு எண்ட் கார்டை ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் போடுமா? என்கிற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

    English summary
    After Marvel’s extravaganza Avengers Endgame movie Spiderman No way Home give every minute goosebumps to fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X