தனிமைப்படுத்திக் கொள்ளாத இத்ரிஸ்.. மனைவிக்கும் பரவியது கொரோனா.. அதிர்ச்சியில் ஹாலிவுட்!
லண்டன்: ஹாலிவுட் நடிகர் இத்ரிஸ் எல்பாவை தொடர்ந்து, அவரது மனைவி சபரினாவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
கடந்த மார்ச் 16ம் தேதி, இத்ரிஸ் எல்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தனக்கு கொரோனா பாசிட்டிவாக வந்துள்ளது என வீடியோ மூலம் தனது ரசிகர்களுக்கு இத்ரிஸ் எல்பா அறிவிக்கும் போது, அவர் அருகில் மனைவி சபரினாவும் உடனிருந்தார்.

இத்ரிஸ் எல்பா, கொரோனா பாதிப்பு காரணமாக ஐசியூவில் இருக்கிறார் என்ற வீடியோ வைரலாகவே, அது ஒரு பொய்யான தகவல், நான் நலமுடன் வீட்டில் தான் இருக்கிறேன் என இத்ரிஸ் எல்பா பதிலளித்தார்.
மேலும், சில நெட்டிசன்கள், உங்கள் மனைவியை ஏன் அருகில் வைத்துள்ளீர்கள், அவருக்கும் கொரோனா தொற்று பரவி விடாதா? சுய தனிமையை ஏன் செய்துக் கொள்ளவில்லை உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பி இருந்தனர்.
இந்நிலையில், இத்ரிஸ் எல்பா மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய சபரினா, தனக்கு கொரோனா வைரஸ் தாக்கும் என்று அறிந்தே இருந்தேன். இருந்தாலும், கஷ்ட காலத்தில், கணவனுக்கு பணிவிடை செய்யாமல் எப்படி விட்டு விலகி செல்வது எனக்கூறியுள்ளார்.
இருவரையும் தனிமைப் படுத்தி வைத்து, தற்போது தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











