For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  டவல் மட்டும் போதும்.. டாப்லெஸ்ஸில் போஸ் கொடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகை.. வைரலாகும் போட்டோஸ்!

  |

  கலிபோர்னியா: நடிகையும் ஹாட் மாடலுமான அலெஸாண்ட்ரா ஆம்ப்ரோஸ்யோவின் (Alessandra Ambrosio) டாப்லெஸ் போட்டோஸ் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

  ஜேம்ஸ் பாண்ட் படமான கேசினோ ராயல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர், விக்டோரியா சீக்ரெட் மாடலாகவும், பல முன்னணி பிராண்டுகளின் விளம்பர பட நடிகையாகவும் பிரபலமானவர்.

  பிரேசில் மாடல் அழகியான இவர், ஏகப்பட்ட டிவி ஷோக்களிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

  'பார்ட்டிக்கு கூப்பிடுங்க.. ஜோக் சொல்றோம்' வெளிப்படையாகக் கேட்ட ஹீரோயினை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!'பார்ட்டிக்கு கூப்பிடுங்க.. ஜோக் சொல்றோம்' வெளிப்படையாகக் கேட்ட ஹீரோயினை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

  விக்டோரியா சீக்ரெட் மாடல்

  விக்டோரியா சீக்ரெட் மாடல்

  உலகின் முன்னணி உள்ளாடை நிறுவனமான விக்டோரியா சீக்ரெட் மாடல் நிறுவனத்தின் டாப் மாடலாக கடந்த 2004ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 13 ஆண்டு காலம் கலக்கியவர் நடிகை அலெஸாண்ட்ரா ஆம்ப்ரோஸ்யோ. மேலும், நெக்ஸ்ட், அர்மானி எக்ஸ்சேஞ்ச், கிறிஸ்டியன் டியோர் மற்றும் ரால்ப் லாரன் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுக்கும் மாடலாக இருந்துள்ளார்.

  ஜேம்ஸ்பாண்ட் நடிகை

  ஜேம்ஸ்பாண்ட் நடிகை

  கடந்த 2006ம் ஆண்டு வெளியான டேனியல் கிரெய்கின் முதல் ஜேம்ஸ் பாண்ட் படமான கேசினோ ராயல் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமான அலெஸாண்ட்ரா, தொடர்ந்து, டாடிஸ் ஹோம், டீனேஜ் மியூட்டன்ட் நின்ஜா டர்டில்ஸ், டபுள் டச்சஸ், டாடிஸ் ஹோம் 2 உள்ளிட்ட ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

  ஃபோர்ப்ஸ் இதழில்

  ஃபோர்ப்ஸ் இதழில்

  2012ம் ஆண்டு வெளியான ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகளவில் டாப் மாடல்கள் பட்டியலில் 6வது இடத்தை பிடித்து அசத்தி இருந்தார் நடிகை அலெஸாண்ட்ரா ஆம்ப்ரோஸ்யோ. அந்த ஆண்டு மட்டும் 6.6 மில்லியன் டாலர்களை மாடலிங் துறையில் மட்டுமே சம்பாதித்து இருந்தார் இவர். 2007ம் ஆண்டு பீப்பிள் இதழ் வெளியிட்ட உலகின் அழகான 100 பெண்கள் பட்டியலிலும் இவர் இடம்பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

  வெறும் சட்டை மட்டும்

  வெறும் சட்டை மட்டும்

  தி லேட் லேட் ஷோ, டைரா பேங் ஷோ, புராஜெக்ட் ரன்வே, நியூ கேர்ள், அஸ்திரேலியாவின் அடுத்த டாப் மாடல், காஸிப் கேர்ள், மாஸ்டர் செஃப் உள்ளிட்ட உலகின் தலை சிறந்த ரியாலிட்டி ஷோக்களில் எல்லாம் இவர் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். பிரபல டிவி மாடலாக வலம் வரும் இவர், கடந்த மாதம் சூரிய கிரகணத்தின் போது, உள்ளாடை அணியாமல், வெறும் சட்டை மட்டும் அணிந்து கொடுத்த போஸ் ரசிகர்களை திக்குமுக்காட வைத்தது.

  புது பாய் ஃபிரெண்ட்

  புது பாய் ஃபிரெண்ட்

  கடந்த 2008ம் ஆண்டு அமெரிக்க தொழிலதிபர் ஜேமி மசூர் என்பவரை அலெஸாண்ட்ரா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு, அதே ஆண்டில் ஒரு பெண் குழந்தையும், 2012ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால், கடந்த 2018ம் ஆண்டு, இருவரும் பிரிவதாக அறிவித்தனர். சமீபத்தில் தனது புது பாய் ஃபிரெண்ட் நிக்கோலோ ஓடியுடன் நீச்சல் குளம் ஒன்றில் ஹாட் லிப் லாக் கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, புயலைக் கிளப்பி இருந்தார் அலெஸாண்ட்ரா.

  வெறும் துண்டு மட்டும்

  வெறும் துண்டு மட்டும்

  இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடை ஏதும் அணியாமல், வெறும் டவலை மட்டுமே மேலே போட்டுக் கொண்டு, அரை நிர்வாணமாக இவர் கொடுத்துள்ள ஹாட் போஸ் இன்ஸ்டாகிராமை சூடாக்கி இருக்கிறது. மண்டே ப்ளூஸ் என நேற்று இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

  சைக்கிள் ஓட்டும்

  சைக்கிள் ஓட்டும்

  கலிபோர்னியாவில் தற்போது வசித்து வரும் இந்த பிரேசில் அழகி மேலாடை ஏதும் அணியாமல், துண்டை மேலே போட்டுக் கொண்டு, சைக்கிள் ஓட்டுவது போல போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம், அவரது ரசிகர்களை திணறடித்து வருகிறது. 39 வயதாகும் இந்த ஹாட் மாடல் இன்ஸ்டாகிராமை சுமார் 10 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

  English summary
  The 39-year-old beauty took to social media on Monday to flaunt her enviable physique in a series of topless photos.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X