கொரோனாவுக்கு மேலும் ஒரு நடிகர் உயிரிழப்பு.. தொடரும் பலியால் திரையுலகம் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!

By

லண்டன்: கொரோனா வைரஸ் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் உயிரிழந்துள்ளார்.

Recommended Video

Jackie Chan prevention advice | கொரோனா Safety Measures

கொரோனாவால் திரையுலகினர் தொடர்ந்து உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜாய் பெனடிக்ட்

ஜாய் பெனடிக்ட்

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது, கொரோனா வைரஸ். இது பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாய் பெனடிக்ட், கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 68. இவர் கடந்த 4 ஆம் தேதி உயிரிழந்ததாக, அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட் பிரபலங்கள்

ஹாலிவுட் பிரபலங்கள்

தனது பிறந்த நாளுக்கு ஒருவாரம் முன்னதாக இறந்துள்ள இவர், ஜேம்ஸ் கேமரூனின் சயின்ஸ்பிக்சன் படமான ஏலியன்ஸ், த ஒயிட் நைட், த அபோகலிப்ஸ் கோட், த டார்க் நைட் ரெய்சஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். பல டிவி. தொடர்களிலும் நடித்துள்ளார். இதையடுத்து அவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கென் ஷிமுரா

கென் ஷிமுரா

கொரோனாவுக்கு திரைபிரபலங்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். ஹாலிவுட் நடிகர் மார்க் பிளம் கடந்த சில நாட்களுக்கு முன், கொரோனாவால் உயிரிழந்தார். பிரபல ஜப்பானிய காமெடி நடிகர் கென் ஷிமுரா, கொரோனா வைரஸால் உயிரிழந்தார். கடந்த மாதம் 23 ஆம் தேதி, அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, டோக்கியோவில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.

ஆண்ட்ரூ ஜாக்

ஆண்ட்ரூ ஜாக்

பின்னர், ஸ்டார் வார்ஸ் படத்தில் நடித்த ஆண்ட்ரூ ஜாக் கொரோனாவுக்கு பலியானார்.
அவருக்குப் பின், எட்டி லார்ஜ் என்ற பிரிட்டீஷ் காமெடி நடிகர் கடந்த சில நாட்களுக்கு முன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அமெரிக்க நடிகையும் எழுத்தாளருமான பேட்ரிசியா போஸ்வொர்த் (patricia bosworth), நியூயார்க்கில் கடந்த சில நாட்களுக்கு முன் மரணமடைந்தார்.

லீ ஃபியர்ரோ

லீ ஃபியர்ரோ

இந்நிலையில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் பட நடிகை லீ ஃபியர்ரோ கொரோனாவுக்கு மரணமடைந்துள்ளார். இவர் ஸ்பீல்பெர்க்கின் ஜாஸ், ஜாஸ்: த ரிவெஞ்ச், த மிஸ்ட் ஓவர் டேல்ஸ் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் வசித்துவந்த இவர், கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X