twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் விருதுகள் 2020.. இந்த படங்களை பார்த்தாச்சா.. இல்லைன்னா உடனே பார்த்துடுங்க!

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழா இந்திய நேரப்படி வரும் திங்களன்று காலை 6.30 மணிக்கு ஹாட்ஸ்டார் உள்ளிட்ட தளங்களில் ஒளிபரப்பாக உள்ளது.

    ஆஸ்கர் விருது விழாவை காணும் முன்னதாக, இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள அந்த 9 சிறந்த படங்களை பார்த்து வீட்டீர்களா.. பார்க்கவில்லை என்றால், உடனடியாக பார்த்து விடுங்கள்.

    பாராசைட், 1917, ஜோக்கர், ஜோ ஜோ ராபிட், தி ஐரிஷ்மேன், மேரேஜ் ஸ்டோரி, ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட், ஃபோர்ட் வெர்சஸ் ஃபெராரி மற்றும் லிட்டில் உமன். இந்த 9 படங்களில் ஒரு படத்துக்குத் தான் இந்த ஆண்டின் சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது கிடைக்கப் போகிறது.

    இது டான்ஸா.. இதெல்லாம் எங்க உருப்படப்போகுது.. நடிகையை துப்பாத குறையாக திட்டித்தீர்த்த நெட்டிசன்ஸ்!இது டான்ஸா.. இதெல்லாம் எங்க உருப்படப்போகுது.. நடிகையை துப்பாத குறையாக திட்டித்தீர்த்த நெட்டிசன்ஸ்!

    லிட்டில் உமன்

    லிட்டில் உமன்

    கிரெட்டா கெர்விக் இயக்கத்தில் சைரோஸ் ரோனன், எம்மா வாட்சன், ஃப்ளோரன்ஸ் பிளக், எல்சா, லாரா டெம், மெரில் ஸ்ட்ரீப் நடிப்பில் உருவாகி உள்ள படம் தான் Little Women. 135 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம் லூயிசா மே அல்காட் எழுதிய ‘1868' நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

    சிவில் வார் பேக் ட்ராப்பில், 4 சகோதரிகளுக்குள் நடக்கும் பிரச்சனைகள், போராட்டத்தை சுவாரஸ்யமாக லிட்டில் உமன் அரசியல் கலந்து விளக்குகிறது. ஆஸ்கர் ரேசில் 6 பிரிவுகளின் கீழ் இந்த படம் போட்டியிடுகிறது.

    ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்

    ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்

    குவெண்டின் டரன்டினோ இயக்கத்தில் லியனார்டோ டிகாப்ரியோ, பிராட் பிட், மார்கட் ராபி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான Once Upon a Time in Hollywood படம் ஆஸ்கர் ரேஸில் முன்னணியில் உள்ளது. சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கரை பிராட் பிட் தட்டிச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பெரிய வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் நடிகருக்கும், அவருடன் இருக்கும் டூப்புக்கும், கிளைமேக்ஸ் காட்சியில் அறிமுகமாகும் பிரபல இயக்குநர் மற்றும் நடிகையின் மூலம் உருவான எதிர்காலத்தை பற்றிய கதை தான் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட். ஹாலிவுட் ரசிகர்கள் நிச்சயம் இந்த படத்தை மிஸ் பண்ணக் கூடாது.

    ஃபோர்ட் வெர்சஸ் ஃபெராரி

    ஃபோர்ட் வெர்சஸ் ஃபெராரி

    பிரபல ஹாலிவுட் நடிகர்களான கிரிஸ்டியன் பேல் மற்றும் மேட் டேமன் நடிப்பில் ஜேம்ஸ் மேன்கோல்ட் இயக்கத்தில் உருவான Ford vs Ferrari திரைப்படம், அமெரிக்க கார் எஞ்சின் டிசைனர் கேரால் ஷெல்பி மற்றும் அதிக வேக ரேஸர் கார் டிரைவரான கென் மைல்ஸ் இருவரின் கதையை பிரம்மாதமாக ஜேம்ஸ் மேன் கோல்ட் இயக்கி உள்ளார். இந்த படம் 4 பிரிவுகளின் கீழ் நாமினேட் ஆகியுள்ளது.

    மேரேஜ் ஸ்டோரி

    மேரேஜ் ஸ்டோரி

    நோவா பம்போச் இயக்கத்தில் ஸ்கார்லெட் ஜோஹன்சன், ஆடம் டிரைவர், லாரா டெர்ன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் Marriage Story. சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த நடிகர் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் இந்த படம் தேர்வாகி உள்ளது. நாடக இயக்குநருக்கும், நடிகரின் மனைவிக்கும் இடையே நடக்கும் காதல் பிரச்சனைகளை இந்த படம் பேசுகிறது.

    ஜோ ஜோ ராபிட்

    ஜோ ஜோ ராபிட்

    டாய்க்கா வைட்டிட்டி இயக்கி நடித்துள்ள ஜோ ஜோ ராபிட் படம் இமேஜினேஷன் ஹிட்லரை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஜோ ஜோ எனும் சிறுவனின் மனதுக்குள் புதைந்துள்ள யூத வன்மத்தை அழகாக சித்தரித்துள்ளது. மேரேஜ் ஸ்டோரி படத்தை தொடர்ந்து ஸ்கார்லெட் ஜோஹன்சன் இந்த படத்திற்கும் சிறந்த நடிகைக்கான பிரிவில் தேர்வாகி உள்ளார்.

    தி ஐரிஷ் மேன்

    தி ஐரிஷ் மேன்

    மார்டின் ஸ்கார்சசி இயக்கத்தில் ராபர்ட் டி நிரோ, அல் பசினோ, ஜோ பெஸ்ஸி, ஹார்வே கெய்டல் என நடிப்பு அசுரர்கள் நடித்துள்ள படம் The Irishman. கேங்ஸ்டர் கதைகளை எடுப்பதில் கில்லாடியான மார்டின் ஸ்கார்சசி, தனது 77வது வயதில் இப்படியொரு கேங்ஸ்டர் படத்தை கொடுத்து மீண்டும் ரசிகர்களை மிரட்டியுள்ளார். படம் இயக்க வருபவர்கள் இந்த படத்தை பாடமாக படிக்கலாம்.

    ஜோக்கர்

    ஜோக்கர்

    டோட் பிலிப்ஸ் இயக்கத்தில் ஜோக்வின் பீனிக்ஸ் நடிப்பில் வெளியாகி உள்ள ஜோக்கர் திரைப்படம் ஹாலிவுட் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆஸ்கர் விருதுகளில் அதிகப்படியாக 11 பிரிவின் கீழ் இந்த படம் நாமினேட் ஆகியுள்ளது. சிறந்த நடிகருக்கான விருதினை ஜோக்வின் பீனிக்ஸ் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிரிப்பு வியாதியால் பாதிக்கப்படும் ஒரு சாதாரண மனிதன் எப்படி சைக்கோ வில்லனாக மாறுகிறான் என்பதே ஜோக்கர் படத்தின் கதை.

    1917

    1917

    இந்த ஆண்டு சிறந்த படத்துக்கான போட்டியில் 1917 மற்றும் பாராசைட் படங்களுக்கு இடையே தான் கடும் போட்டி என பலரும் பிரெடிக்‌ஷன் ரிப்போர்ட்களை வெளியிட்டுள்ளனர். சிங்கிள் ஷாட் மூவின் என்கிற மாயாஜாலத்தை இயக்குநர் சாம் மெண்டிஸ் இந்த படத்தில் அழகாக மிரட்டியுள்ளார். பத்து பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த படத்தை மிஸ் பண்ணிடாதீங்க..

    பாராசைட்

    பாராசைட்

    கழிப்பறையும், சமையலறையும் ஒன்றாக இருக்கும் ஒரு சின்ன இடத்தில் வசிக்கும் ஏழை குடும்பத்துக்கு, பணக்கார குடும்பத்துடன் கிடைக்கும் தொடர்பை பயன்படுத்திக் கொண்டு என்ன செய்கிறார்கள் என்பதை கொரிய இயக்குநரான பாங் ஜூன் ஹோ வித்தியாசமாக படம் பிடித்துள்ளார். ஏழை - பணக்கார ஏற்றத் தாழ்வை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ள இந்த படத்தையும் பார்த்துடுங்க..

    English summary
    Before Oscar awards 2020, please watch the best movie nomination category movies. These all are worth watch.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X