இப்படி ஒரு காஸ்ட்லி கர்ப்பமா?: நடிகரை பார்த்து சிரிக்கும் திரையுலகம்
லாஸ் ஏஞ்சல்ஸ்: நடிகர் ஒருவரின் மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தி அறிந்து ஹாலிவுட்டே வியப்பில் சிரிக்கிறது.
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி மனித உரிமை வழக்கறிஞரான அமலை திருமணம் செய்தார். அமலுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை ஏற்பட்டு அதை தனது கணவரிடம் தெரிவித்தார்.
க்ளூனியோ அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.

விவாகரத்து
குழந்தை பெற்றுக் கொள்ள சம்மதிக்காவிட்டால் உங்களை விவாகரத்து செய்வேன் என்று அமல் தனது கணவரிடம் தெரிவித்தார். அவரை பிரிய அமல் ரூ.2 ஆயிரத்து 21 கோடி ஜீவனாம்சம் கேட்டார்.

அடேங்கப்பா
அமல் கேட்ட ஜீவனாம்ச தொகையை கேட்டு க்ளூனிக்கு மட்டும் அல்ல ஹாலிவுட்டுக்கே கண்ணை கட்டிக் கொண்டு வந்துவிட்டது. இதையடுத்து தான் க்ளூனி ஒரு முடிவு செய்திருக்கிறார்.

கர்ப்பம்
அமல் மற்றும் ஜார்ஜ் க்ளூனி பிரியப் போகிறார்கள் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அமல் கர்ப்பமாகியுள்ளார். அவர் கருவில் இரட்டை குழந்தைகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிண்டல்
ரூ. 2 ஆயிரத்து 21 கோடி ஜீவனாம்சம் கொடுப்பதற்கு பதில் குழந்தைக்கு தந்தையாகிவிடுவது மேல் என்று ஜார்ஜ் க்ளூனி முடிவு செய்துவிட்டார் போல என்று ஹாலிவுட்டில் கிண்டல் செய்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











