முகத்திலேயே குத்தினார், விரலை துண்டித்தார்: மாஜி மனைவி மீது நடிகர் புகார்
லாஸ் ஏஞ்சல்ஸ்: நடிகை ஆம்பர் ஹெர்ட் தன்னை தாக்கி விரலை துண்டித்ததாக ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பும், நடிகை ஆம்பர் ஹெர்டும் காதலித்து திருமணம் செய்தனர். பின்னர் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
ஜானி டெப் தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாக ஹெர்ட் தெரிவித்தார். இதையடுத்து டெப் ரூ. 355 கோடி நஷ்டஈடு கேட்டு ஹெர்ட் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

ஹெர்ட்
ஆம்பர் ஹெர்ட் சொல்வது எல்லாம் பொய். அவர் தான் என்னை தாக்கினார். நான் அவரை அடித்து துன்புறுத்தியதாக அவர் தெரிவித்ததையடுத்து அவர் லாரியல் பாரீஸ் பிராண்டின் சர்வதேச செய்தித் தொடர்பாளர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். மீ டூ இயக்கத்தினர் அவரை பெரிய ஹீரோயினாக பார்க்கிறார்கள் என்று டெப் தெரிவித்துள்ளார்.

விரல்
ஆம்பர் ஹெர்ட் ஜானி டெப்பை முகத்தில் குத்தியதுடன், அவரின் விரலை துண்டித்ததாக அவரின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் அதற்கான வீடியோ, புகைப்பட ஆதாரங்களையும் சமர்பித்துள்ளனர்.

ஆதாரம்
தான் ஆம்பர் ஹெர்டை தாக்கவில்லை என்பதை நிரூபிக்க 87 சிசிடிவி கேமரா வீடியோக்களை டெப் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளார். மேலும் போலீஸ் அதிகாரிகள் உள்பட 17 சாட்சியங்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளார்.

மன்னிப்பு
கட்டிய மனைவியை அடிக்கும் நீங்கள் எல்லாம் ஒரு ஹீரோவா என்று கேட்டு ஜானி டெப்பை திட்டி வந்த ரசிகர்கள் தற்போது மனம் மாறிவிட்டனர். அடி வாங்கியது நீங்கள் தான் என்று தெரியாமல் திட்டிவிட்டோம் என்று மன்னிப்பு கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











