மனித வேட்டையாடும் சிங்கம்.. குடும்பத்தினரை காப்பாற்றுவாரா ஹீரோ.. பீஸ்ட் ட்ரெயிலர் வெளியீடு!
சென்னை : நடிகர் நேட் சாமுவேல், மெரிடித் சாமுவேல் மற்றும் நோரா சாமுவேல் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட்.
இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
தன்னுடைய முதல் மனைவியின்மூலம் பிறந்த இரண்டு பெண் பிள்ளைகளின் அன்பை பெறுவதற்காக நேட் சாமுவேல் மேற்கொள்ளும் முயற்சி எவ்வாறு விபரீதத்தில் முடிகிறது என்பதை இந்தக் கதை சொல்கிறது.

ஹாலிவுட் பீஸ்ட் படம்
நடிகர் இட்ரிஸ் எல்பா, இயானா ஹாலே, மற்றும் லே சாவா ஜெப்ரிஸ் ஆகியோர் நேட் சாமுவேல், மெரிடித் சாமுவேல் மற்றும் நோரா சாமுவேல் ஆகிய கேரக்டர்களில் நடித்து விரைவில் ரிலீசாக உள்ள படம் பீஸ்ட். தமிழில் சமீபத்தில் இதே தலைப்பில் விஜய் படம் வெளியானது. ஆனால் அதற்கும் இந்தப் படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்தப் படத்தில் மனித வேட்டையாடும் சிங்கத்தை சுற்றி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

2 பெண் குழந்தைகள்
பால்டாசர் கோர்மாக்கூர் இயக்கத்தில் ரியான் எங்கல் திரைக்கதையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தின் கதையை எழுதியுள்ளார் ஜெய்மி சுல்லிவன். படத்தில் தன்னுடைய முன்னாள் மனைவி மற்றும் தனது இரண்டு பெண் குழந்தைகளை சந்திக்க தென்னாப்பிரிக்கா வருகிறார் நேட் சாமுவேல்.

காட்டிற்கு குடும்பத்தினருடன் பயணம்
நீண்ட நாட்களாக தன்னுடைய மகள்களுடன் காட்டிற்கு செல்ல திட்டமிட்ட நேட், தன்னுடைய நண்பர் மற்றும் வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் துணையுடன் அந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். அங்கு அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை கதைக்கருவாக இந்தப் படம் கொண்டுள்ளது.

10 வாரங்களில் சூட்டிங் நிறைவு
கடந்த 2020 செப்டம்பரில் இந்தப் படத்தை யூனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. தொடர்ந்து படம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சூட்டிங் துவங்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் அடர்ந்த வனப்பகுதிகளில் இந்தப் படத்தின் சூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் 10 வாரங்களிலேயே படத்தின் சூட்டிங் நிறைவு செய்யப்பட்டது.
ஆகஸ்ட் 19ல் ரிலீஸ்
லிம்போபோ, நார்த்தர்ன் கேப், கேப் டவுன் உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு தற்போது படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 19ம் தேதி படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக யூனிவர்சல் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இந்நிலையில் படத்தின் மிரட்டலான ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

மனித வேட்டையாடும் சிங்கம்
காட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் டாக்டர் நேட் சாமுவேலின் குடும்பத்தினர் மனித வேட்டையாடும் சிங்கத்திடம் மாட்டிக் கொள்கின்றனர். அந்த சிங்கத்திடம் இருந்து தன்னுடைய மகள்களை நேட் எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதை விறுவிறுப்பாக படம் கூறுகிறது.

ப்ளூ சட்டை மாறன் கமெண்ட்
இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெயிலரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள இயக்குநரும் விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன், ஒரிஜினல் பீஸ்ட் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். அதற்கேற்ப சிங்கத்துடன் நேட் மல்லுக்கட்டும் காட்சிகள் மிகவும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications











