twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமாவின் காட்பாதர் மெல்வின் வான் பீபிள்ஸ் காலமானார்!

    |

    அமெரிக்கா : சினிமாவின் காட்பாதர் என்று அழைக்கப்படும் மூத்த திரைப்படத் தயாரிப்பாளர் மெல்வின் வான் பீபிள்ஸ் காலமானார் அவருக்கு வயது 89.

    நியூயார்க்கில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்த அவர் வயது மூப்பு காரணமாக காலமானார்.

    உங்க பஞ்சாயத்து ஓவர்.. என் பஞ்சாயத்து இன்னும் முடியலையே.. பூகம்பத்தை கிளப்பிய பாஸ் நடிகர்!உங்க பஞ்சாயத்து ஓவர்.. என் பஞ்சாயத்து இன்னும் முடியலையே.. பூகம்பத்தை கிளப்பிய பாஸ் நடிகர்!

    அவரின் உடலுக்கு இயக்குனர்கள் ஸ்பைக் லீ, அவா டுவெர்னே மற்றும் பாரி ஜென்கின்ஸ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    சிகாகோவில் பிறந்தார்

    சிகாகோவில் பிறந்தார்

    1932ம் ஆண்டு சிகாகோவில் பிறந்தவர் மெல்வின் வான் பீபிள்ஸ். சிறு வயதிலேயே திரைத்துறையில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்துள்ளார். 1968 ஆம் ஆண்டு The Story of a three daya pass என்ற குறும்படத்தை தயாரித்து திரைத்துறையில் நுழைந்தார். இது இனவெறி பற்றி பேசும் திரைப்படமாக அமைந்து வெற்றி பெற்றது.

    ஜாம்பவான்

    ஜாம்பவான்

    1970ம் ஆண்டுகளில் Watermelon Man, Sweet Sweetback's Baadasssss Song and Panther போன்ற படங்களின் மூலம் புகழ் பெற்று திரைத்துறையில் தவிர்க்க முடியாத ஜாம்பவான விளங்கினார்.

    திறம்பட விளங்கினார்

    திறம்பட விளங்கினார்

    நடிகர், நாடக ஆசிரியர், நாவலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளராக என பன்முகத் தன்மையில் திகழ்ந்தார் மெல்வின் வான் பீபிள்ஸ், பிராட்வே நிகழ்ச்சிக்காக புத்தகங்களை எழுவதும், இசை அமைப்பது மற்றும் பாடல்களை எழுதுவது என அனைத்து பணிகளை திறம்பட செய்து வந்தார். சிறந்த மேடை பணிக்காக இரண்டு டோனி விருதுகளையும் வென்றார். மேலும், அவரது மகன் இயக்கிய படங்களில் கேமராவுக்குப் பின்னால் பல பணிகளை மேற்கொண்டார்.

    இரங்கல்

    இரங்கல்

    மெல்வின் வான் பீபிள்ஸின் மகன் மரியோ தந்தையின் இறப்பு குறித்து இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதில், மெல்வின் வான் பீபிள்ஸ், வயது மூப்பு காரணமாக மன்ஹாட்டனில் உள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததாக கூறினார். மேலும், என் தந்தை கருப்பு படங்களை மிகவும் நேசித்தார். ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளின் அர்த்தங்களுக்கு உரியது என்று கூறுவார் என்றார். வான் பீபிள்ஸின் மறைவு செய்தியைத் தொடர்ந்து முன்னணி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர். அவரின் உடலுக்கு இயக்குனர்கள் ஸ்பைக் லீ, அவா டுவெர்னே மற்றும் பாரி ஜென்கின்ஸ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    English summary
    American filmmaker Melvin Van Peebles, the director behind films like Watermelon Man, Sweet Sweetback's Baadasssss Song and Panther, to name a notable few, has passed away. He was 89.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X