3வது திருமணத்துக்கு தயாரான பிரிட்னி ஸ்பியர்ஸ்.. நீண்ட நாள் காதலருடன் முடிந்தது நிச்சயதார்த்தம்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல பாப் சிங்கரான பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது நீண்ட நாள் காதலருடன் நிச்சயதார்த்தம் முடித்துள்ளார்.

பாப் உலகின் இளவரசி என அழைக்கப்படுபவர் நடிகை பிரிட்னி ஸ்பியர்ஸ். 39 வயதான பிரிட்னி ஸ்பியர்ஸ் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.

பாப் பாடகியாக மட்டுமின்றி பாடல் ஆசிரியராகவும் டான்ஸராகவும் வலம் வருகிறார். 1990கள் மற்றும் 2000களில் பாப் உலகின் இளவரசி என்ற பட்டத்தை பெற்றார் பிரிட்னி ஸ்பியர்ஸ்.

பேபி ஒன் மோர் டைம்

பேபி ஒன் மோர் டைம்

தனது 15 வயதிலேயே பல முன்னணி நிறுவனங்களின் இசை ஆல்பங்களில் இடம் பெற்றார் பிரிட்னி ஸ்பியர்ஸ். ஏராளமான மேடை நிகழ்ச்சிகளிலும் டிவி சீரிஸ்களிலும் பங்கேற்றுள்ளார் பிரிட்னி ஸ்பியர்ஸ். அவருடைய முதல் இசை ஆல்பமான பேபி ஒன் மோர் டைம் 1999 ஆம் ஆண்டு வெளியாகி உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்

பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்

இதுவரை ஏராளமான இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார் பிரிட்னி ஸ்பியர்ஸ். அவருடைய ஆல்பங்கள் 100 மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பியை பூர்விகமாக கொண்ட பிரிட்னி ஸ்பியர்ஸ் பல்வேறு சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர்.

55 மணிநேரத்தில் முடிந்த திருமணம்

55 மணிநேரத்தில் முடிந்த திருமணம்

கடந்த 2004ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது நீண்டகால நண்பரான ஜேசன் ஆலன் அலெக்சாண்டரை திருமணம் செய்தார் பிரிட்னி ஸ்பியர்ஸ். ஆனால் அந்த திருமணம் செல்லாது என அடுத்த 55 மணி நேரத்தில் நீதிமன்றம் அறிவித்தது. தான் என்ன செய்கிறோம் என்ற புரிதல் பிரிட்னி ஸ்பியர்ஸுக்கு இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

அடுத்த சில மாதங்களில் 2வது திருமணம்

அடுத்த சில மாதங்களில் 2வது திருமணம்

இதனால் மூன்று நாட்களுக்குள்ளாகவே முடிவுக்கு வந்தது அவரது முதல் திருமணம். இதனை தொடர்ந்து அடுத்த சில மாதங்களில் கெவின் ஃபெடர்லைன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார் பிரிட்னி ஸ்பியர்ஸ். ஆனால் இந்த திருமணமும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. இருவரும் 2007 ஆம் ஆண்டு சட்டப்படி விவகாரத்து பெற்று பிரிந்தனர்.

தானே மொட்டையடித்து கொண்ட பிரிட்னி ஸ்பியர்ஸ்

தானே மொட்டையடித்து கொண்ட பிரிட்னி ஸ்பியர்ஸ்

தனது குழந்தைகளை பராமறிக்கும் உரிமையையும் பறித்த நீதிமன்றம் அவரின் மகன்களை அவர்களின் தந்தையான கெவின் ஃபெடர்லைன் கட்டுப்பாட்டில் இருக்க உத்தரவிட்டது. ஆனால் இதற்கான காரணம் வெளி வரவில்லை. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார் பிரிட்னி ஸ்பியர்ஸ். மின்சார ட்ரிம்மர் மூலம் ஒரே இரவில் தனது முடியை தானே மொட்டையடித்துக் கொண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

தந்தையின் கட்டுப்பாட்டில் பிரிட்னி ஸ்பியர்ஸ்

தந்தையின் கட்டுப்பாட்டில் பிரிட்னி ஸ்பியர்ஸ்

தனது அலுவலக ஊழியர்கள் அடுத்தடுத்து விலகியது, பத்திரிக்கையாளர் காரை குடை மூலம் தாக்கியது என கடும் சர்ச்சைகளில் சிக்கினார். இதற்காக மனநலம் மையத்தில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கின் கடந்த 2008ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் தந்தை ஜேமி ஸ்பியர்ஸ் மற்றும் வழக்கறிஞர் ஆண்ட்ரூ வாலட் ஆகியோரின் கட்டுப்பாட்டில் பிரிட்னி ஸ்பியர்ஸ் இருக்க வேண்டும் என உத்தரவிட்டது.

கட்டுப்பாடுகளை திரும்ப பெற வேண்டும்

கட்டுப்பாடுகளை திரும்ப பெற வேண்டும்

கடந்த 14 ஆண்டுகளாகவே தனது வாழ்க்கை குறித்த எந்த முடிவையும் சுயமாக எடுக்க முடியாமல் தந்தையின் கட்டுப்பாட்டில் உள்ளார் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். பிரிட்னி ஸ்பியர்ஸுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

காதலருடன் நிச்சயதார்த்தம் செய்த பிரிட்னி

காதலருடன் நிச்சயதார்த்தம் செய்த பிரிட்னி

கடந்த சில மாதங்களுக்கு முன்பு #FreeBritney என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு டிவிட்டர் உலகையே திரும்பி பார்க்க வைத்தனர் அவரது ரசிகர்கள். இந்நிலையில் பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது நீண்ட நாள் காதலரான சாம் அஸ்காரியுடன் திருமண நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளார். தங்களின் நிச்சயதார்த்த மோதிரத்தை காட்டியப்படி போஸ் கொடுத்துள்ளார் பிரிட்னி ஸ்பியர்ஸ்.

காதலாக மாறிய நட்பு

காதலாக மாறிய நட்பு

2016 ஆம் ஆண்டு Slumber Party என்ற இசை வீடியோவில் சாம் அஸ்காரியுடன் இணைந்து பணியாற்றினார் பிரிட்னி ஸ்பியர்ஸ். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில் நேற்று இருவரும் நிச்சயதார்த்தம் முடித்துக் கொண்டனர்.

காதலர் கன்னத்தில் முத்தம்

காதலர் கன்னத்தில் முத்தம்

இதுதொடர்பாக தான் ஷேர் செய்துள்ள வீடியோவில் தனது காதலருடன் உள்ளார் பிரிட்னி ஸ்பியர்ஸ். தனது விரலில் அணிந்துள்ள நிச்சயதார்த்த மோதிரத்தை காட்டியப்படி விதவிதமாக போஸ் கொடுத்துள்ள பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது காதலரின் கன்னத்திலும் முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஹாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து

ஹாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து

பிரிட்னி ஸ்பியர்ஸின் இந்த வீடியோவை பார்த்த ஹாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். மேலும் பிரிட்னி ஸ்பியர்ஸ் ஷேர் செய்துள்ள இந்த வீடியோவை இதுவரை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து லைக் செய்துள்ளனனர். 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வாழ்த்து தெரிவித்து மெஸேஜ் பதிவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X