ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படத்துல அமிதாப் பச்சனா?: இவரு அவருல்ல? ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!

மும்பை: இந்தி திரையுலகின் முன்னணி நடிகரும் சூப்பர் ஸ்டாருமான அமிதாப் பச்சன், இப்போதும் படங்களில் நடித்து வருகிறார்.

அமிதாப் பச்சன் சால்ட் & பெப்பர் லுக்கில் வயதுக்கு ஏற்ற கேரக்டர்களில் மட்டும் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஹாலிவுட்டில் உருவாகியுள்ள 'Samaritan' படத்தில் அமிதாப்பச்சன் நடித்துள்ளாரா என நெட்டிசன்கள் கேள்வியெழுப்பி ட்ரோல் செய்து வருகின்றனர்.

50 ஆண்டுகள்

50 ஆண்டுகள்

1969ல் 'சாத் இந்துஸ்தானி' திரைப்படத்தில் அறிமுகமான அமிதாப் பச்சன், முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகருக்கான தேசிய விருதை வென்றிருந்தார். தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு் மேலாக படங்களில் நடித்து வரும் அமிதாப் பச்சனுக்கு, உலகம் முழுவதும் பலகோடி ரசிகர்கள் உள்ளனர். அமிதாப் பச்சனே இன்றளவும் இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

சால்ட் & பெப்பர்

சால்ட் & பெப்பர்

ஹீரோவாக ஃபுல் ஃபார்மில் இருக்கும் போதே, மல்டி ஸ்டார் படங்களிலும் எந்த ஈகோவும் இல்லாமல் நடித்து வந்தார் அமிதாப். ஷாருக்கான், சல்மான் கான், ஹிருத்திக் ரோஷன், ஃசயிப் அலிகான், அக்சய் குமார், அஜய் தேவ்கன் என தற்போதைய பாலிவுட் லீடிங் ஸ்டார்கள் அனைவருமே அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்துள்ளனர். கதைக்குத் தேவையென்றால், ஒரே படத்தில் எத்தனை நடிகர்களுடனும் நடித்துவிடுவார் அமிதாப்.

சால்ட் & பெப்பர்

சால்ட் & பெப்பர்

கடந்த சில வருடங்களாக தனது வயதுக்கு ஏற்ற கேரக்டர்கள் கொண்ட படங்களில் மட்டுமே கமிட் ஆகும் அமிதாப், ஒரிஜினலான சால்ட் & பெப்பர் லுக்கிலேயே திரையில் தோன்றி வருகிறார். ஆனாலும், அவரது ஸ்டைலும் கெத்தும் இன்னும் செம்ம மாஸ்ஸாகவே இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஷமிதாப், பிங்க், 102 நாட் அவுட், ஜுன்த் போன்ற படங்களில் அவரது நடிப்பையும் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

ஹாலிவுட்டில் அமிதாப்?

ஹாலிவுட்டில் அமிதாப்?

இந்நிலையில், ஹாலிவுட்டில் உருவாகியுள்ள 'Samaritan' படத்தின் ட்ரெய்லர், இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. சூப்பர் ஹீரோ பின்னணியிலான இந்தப் படம் ஆகஸ்ட் 26ம் தேதி அமேசானிலும் வெளியாகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லரை பார்த்த பாலிவுட் ரசிகர்கள், படத்தின் ஹீரோவை பார்த்து "இது நம்ம அமிதாப் பச்சன் ஆச்சே" என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இன்னும் விதவிதமாக கருத்துகளைக் கூறி 'Samaritan' பட ட்ரெய்லரை, நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

ரியல் சூப்பர் ஹீரோ

ரியல் சூப்பர் ஹீரோ

ஆனால், உண்மையில் 'Samaritan' படத்தில் ஹீரோவாக நடித்துள்ளது ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் சில்வர் ஸ்டோலன் தானாம். அவரும் நம்ம அமிதாப் மாதிரியே சால்ட் & பெப்பர் லுக்கில் ராஜநடை போட, நம்மூர் நெட்டிசன்கள், இது அமிதாப் லுக் என சில்வர் ஸ்டோலனை ட்ரோல் செய்கின்றனர். 13வயது சிறுவனை காப்பாற்றும் சூப்பர் ஹீரோவாக 'Samaritan' படத்தில் நடித்துள்ளார் சில்வர் ஸ்டோலன். நிச்சயமாக இந்தப் படத்தில் சில்வர் ஸ்டோலனின் ஆக்சன் காட்சிகள், மிரள வைக்கும் எனக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X