Don't Miss!
- Sports
இனி தோனி கிடையாது.. ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அட்டகாச சாதனை.. சச்சினுக்கும் பின் வரிசைதான்
- Finance
GoMechanic நிதி கணக்கில் மோசடி.. உண்மையை ஒப்புக்கொண்ட அமித்.. ஊழியர்கள் கண்ணீர்..!
- Technology
ஃபிளைட்ல போறப்ப ஏன் Airplane mode ஆன் பண்ண சொல்றாங்க தெரியுமா? ஐயோ.! இதான் காரணமா?
- Lifestyle
வெற்றிலை சாப்பிட்ட பிறகு நீங்க இந்த உணவு பொருட்கள சாப்பிடக்கூடாதாம்... மீறி சாப்பிட்டா ஆபத்தாம்!
- News
மர்ம முடிச்சு அவிழுமா? ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை! அடுத்த கட்டத்திற்கு செல்லுமா?
- Travel
சென்னை விமான நிலையத்தில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் – இனி காத்திருக்கும் நேரத்தில் படம் பார்க்கலாம்!
- Automobiles
மாருதி கார்களில் இவ்ளோ பெரிய பிரச்னையா! ஓட்ட வேண்டாம் என எச்சரிக்கை! விஷயம் இப்பதான் வெளிய தெரிஞ்சிருக்கு!
- Education
பெட்ரோலிய கழகத்தில் ரூ.81 ஆயிரத்தில் பணி வாய்ப்பு...!
ஹாலிவுட் நடிகருடன் எமி ஜாக்சன் டேட்டிங்.. இணையத்தில் கசிந்த புகைப்படங்கள்.. ஷாக்கான ரசிகர்கள்!
லண்டன்: நடிகை எமி ஜாக்சன் தனது பார்ட்னர் ஜார்ஜ் உடன் குழந்தை பெற்றுக் கொண்ட நிலையில், அவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக சமீப காலமாக தகவல்கள் பரவி வந்தன.
இந்நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகருடன் எமி ஜாக்சன் டேட்டிங் செல்லும் படங்கள் சமூக வலைதளத்தில் கசிந்து பரபரப்பை கிளப்பி உள்ளது.
குழந்தையை தவிக்க வைத்து விட்டு இப்படி புதிய பார்ட்னருடன் டேட்டிங் செய்யலாமா என ரசிகர்கள் கமெண்ட்டில் கழுவி ஊற்றி வருகின்றனர்.
பிகில் பட நடிகைக்கு ஹார்ட் விட்ட முரட்டு சிங்கிள் பிரேம்ஜி… கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்!

இங்கிலாந்து இறக்குமதி
இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்து மாடல் அழகியாக வலம் வந்த எமி ஜாக்சனை மதராசபட்டினம் படத்திற்காக இறக்குமதி செய்திருந்தார் இயக்குநர் ஏ.எல். விஜய். அந்த படம் ஹிட் ஆனதும் கோடம்பாக்கத்திலேயே தங்கிய எமி ஜாக்சன் தாண்டவம், தெறி, கெத்து, தங்கமகன், ஐ, 2.0 என பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

கல்யாணம் பண்ணாம குழந்தை
தொழிலதிபர் ஜார்ஜ் பன்னாயுட்டு நடிகை எமி ஜாக்சன் மீது காதலில் விழுந்த நிலையில், இருவரும் நிச்சயம் செய்து கொண்டனர். ஆனால், அதன் பின்னர் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்த்த நிலையில், பார்ட்னராக வாழ முடிவு செய்த இருவரும் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர். குழந்தை மற்றும் கணவருடன் போட்டோக்களை போட்டு வந்த எமி ஜாக்சன் சமீப காலமாக சிங்கிளாக போட்டோக்களை போட்டு வருகிறார்.

அடுத்த பார்ட்னர்
நடிகை எமி ஜாக்சன் அடுத்த பார்ட்னரை தேடிக் கொண்டார் என சமீப காலமாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது ஹாலிவுட் நடிகருடன் டேட்டிங் சென்ற புகைப்படங்களே கசிந்துள்ள நிலையில், இவர் தான் உங்கள் அடுத்த பார்ட்னரா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

யார் அந்த ஹாலிவுட் நடிகர்
ஹாலிவுட் படமான Gossips Girl படத்தில் நடித்துள்ள எட் வெஸ்ட்விக் (Ed Westwick) நடிகருடன் லண்டன் வீதிகளில் நடிகை எமி ஜாக்சன் சிரித்துக் கொண்டு செல்லும் புகைப்படம் டிரெண்டாகி வருகிறது. புகைப்படக் கலைஞர்கள் போட்டோ எடுப்பதை பார்த்தும், அதை கண்டு கொள்ளாமல் அந்த நடிகருடன் ஜோடி போட்டு எமி ஜாக்சன் சென்றது தான் தற்போது இப்படியொரு பேச்சு கிளம்ப காரணமாக அமைந்துள்ளது.

ஷார்ட்ஸ் அணிந்து
வெறும் டிசர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் நடிகை எமி ஜாக்சனின் கையை கோர்த்துக் கொண்டு நடந்து செல்லும் புகைப்படங்கள் வெளியாகி காட்டுத்தீ போல பரவி வருகின்றன. மீண்டும் நடிக்க முடிவு செய்தது தான் எமி ஜாக்சனுக்கும் அவரது பார்ட்னர் ஜார்ஜுக்கும் இடையே சண்டை வரக் காரணம் என்றும் கூறுகின்றனர்.

குழந்தையை யார் பார்த்துக்குறா
ஆண்ட்ரியாஸ் எனும் ஆண் குழந்தைக்கு அம்மாவான நடிகை எமி ஜாக்சன் மீண்டும் விளம்பர படங்கள், மாடலிங் உள்ளிட்டவற்றில் ஆர்வம் செலுத்தி வருகிறார். எமி ஜாக்சனின் அம்மா தான் தற்போது குழந்தை ஆண்ட்ரியாஸை கவனித்துக் கொள்கிறார் என்றும் கூறப்படுகிறது. சமீப காலமாக குழந்தையை கொஞ்சும் புகைப்படங்களையோ, வீடியோக்களையோ எமி ஜாக்சன் பதிவிடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.