கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற மேலும் ஒரு நடிகர் திடீர் உயிரிழப்பு.. திரையுலகில் தொடரும் அதிர்ச்சி!

By

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒரு பிரபல நடிகர், திடீரென்று உயிரிழந்தார்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டாம் ஹாங்க்ஸ்

டாம் ஹாங்க்ஸ்

இந்த கொரோனா வைரஸ் பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் சிகிச்சை பெற்று சொந்த ஊருக்குத் திரும்பினர். ஜேம்ஸ்பாண்ட் பட ஹீரோயின், ஓல்கா குரிலென்கோ (Olga Kurylenko)வையும் இது விட்டு வைக்கவில்லை.

சிகிச்சை

சிகிச்சை

இவர், குவாண்டம் ஆப் சோலஸ், ஒபிலிவியான், மொமன்டம், த ரூம் உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தனது இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்திருந்த அவர், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் தான் குணமாகிவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.

மார்க் ப்ளம் மரணம்

மார்க் ப்ளம் மரணம்

இந்நிலையில் ஹாலிவுட் நடிகர் மார்க் பிளம் கடந்த சில நாட்களுக்கு முன், கொரோனாவால் உயிரிழந்தார். இவர், ஜஸ்ட் பிட்வீன் பிரண்ட்ஸ், க்ரொக்கடைல் டண்டி, பிளசண்ட் டே, லவ்சிக், தி பிரசிடியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மார்க் ப்ளம் சிகிச்சை பலனின்றி இறந்ததாக அவரது குடும்ப நண்பருமான லீ வில்காஃப் தெரிவித்தார்.

காமெடி நடிகர்

காமெடி நடிகர்

பின்னர் பிரபல ஜப்பானிய காமெடி நடிகர் கென் ஷிமுரா, கொரோனா வைரஸால் உயிரிழந்தார்.. ஜப்பானில் அனைவருக்கும் தெரிந்த முகமான இவர், காமெடியில் கொடி கட்டி பறந்தவர். இப்போதும் படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார். கடந்த 23 ஆம் தேதி, அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, டோக்கியோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.

ஆண்ட்ரூ ஜாக்

ஆண்ட்ரூ ஜாக்

இப்போது, ஸ்டார் வார்ஸ் படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் ஆண்ட்ரூ ஜாக் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதற்காக இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 76. ஆண்ட்ரூ ஜாக், ஸ்டார் வார்ஸ் படத்தின் 7 மற்றும் 8-ம் பாகங்களில் நடித்து இருக்கிறார்.

பேச்சு வழக்கு

பேச்சு வழக்கு

ஹாலிவுட் படங்களில் பேச்சு வழக்கு பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கேப்ரியலும் நடிகர்களுக்கான பேச்சு வழக்குப் பயிற்சியாளராக இருக்கிறார். ஆண்ட்ரூ ஜேக், தேம்ஸ் நதியில் படகு வீடுகளில் ஒன்றில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். ஆண்ட்ரூவின் மனைவி கேப்ரியலும் இவர் தற்போது ஆஸ்திரேலியாவில் கொரோனாவால்தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஹாலிவுட் பிரபலங்கள்

ஹாலிவுட் பிரபலங்கள்

ஆண்ட்ரூ மறைவைப் பற்றி தெரிவித்துள்ள கேப்ரியல், இரண்டு நாட்களுக்கு முன்பு ஆண்ட்ரூவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அவர் இறக்கும்போது, தனது குடும்பத்தினர் தன்னுடன் இருக்கிறார்கள் என்கிற நிம்மதியுடன் உயிர் பிரிந்தது எனவும் குறிப்பிட்டிருக்கிறார். ஆண்ட்ரூ ஜாக் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X