பார்ட்னர் பிராட் பிட்டுக்காக ரூ.121 கோடிக்கு இதய வடிவிலான தீவு வாங்கிய நடிகை ஏஞ்சலினா ஜூலி?
லண்டன்: தனது லிவ் இன் பார்ட்னர் பிராட் பிட்டின் 50வது பிறந்தநாளுக்கு பரிசாக அளிக்க ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி இதய வடிவில் ஒரு தீவை வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி(38) கடந்த 2005ம் ஆண்டு முதல் நடிகர் பிராட் பிட்டுடன்(49) திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வருகிறார். அவர்கள் இருவரும் சேர்ந்து 3 தத்துப்பிள்ளைகள் உள்பட 6 குழந்தைகளை வளர்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஜூலி தனது பார்ட்னர் பிட்டை மகிழ்விக்க பணத்தை தண்ணீராக செலவளித்துள்ளார்.

50வது பிறந்தநாள்
பிராட் பிட் வரும் டிசம்பர் மாதம் 18ம் தேதி தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ஸ்பெஷலான பரிசு கொடுக்க முடிவு செய்தார் ஜூலி.

தீவு
நியூயார்க் நகரில் இருந்து 50 மைல் தொலைவில் உள்ள இதய வடிவிலான பெட்ரா தீவு விலைக்கு வருவதை கேள்விப்பட்டார் ஜூலி. உடனே அந்த தீவை பார்க்க கிளம்பினார்.

ரூ.121 கோடி
பிட்டுக்கு பிடித்த கட்டிடக் கலைஞர் பிரான்க் லாய்ட் ரைட் வடிவமைத்த அந்த தீவு ஜூலிக்கு மிகவும் பிடித்துவிட்டது. இதையடுத்து அவர் ரூ.121 கோடி கொடுத்து அந்த தீவை வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

புற்றுநோய் அபாயம்
மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருந்ததால் ஜூலி அறுவை சிகிச்சை மூலம் தனது மார்பகங்களை அகற்றினார். பின்னர் அதை அவரே உலகிற்கு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











