twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிப்புக்கு டாடா முழு நேர இயக்குநராகும் ஏஞ்சலினா ஜோலி!

    |

    பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி நடிப்புக்கு டாடா காட்டிவிட்டு முழுநேர இயக்குநராக மாறப்போவதாக அறிவித்துள்ளார். ஏஞ்சலினாவின் ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு ஏமாற்றம்தான் என்றாலும் இயக்குநராகவாவது அவரை திரையில் பார்க்கலாமே என்று ஆறுதல் பட்டுக்கொள்ளலாம்.

    39 வயதாகும் நடிகை ஏஞ்சலினா ஜோலி தனது நீண்டநாள் காதலரான பிராட்பிட்டை 6 குழந்தைகளுடன் திருமணம் செய்து கொண்டார். குடும்ப வாழ்க்கை, சமூக சேவை, நடிப்பு என பரபரப்பாக இருந்தாலும் சிறந்த திரைப்படம் இயக்குநராகவும் தன்னை நிரூபித்துள்ளார்.

    Angelina Jolie confirms retirement from acting

    இவர் சமீபத்தில் அன் புரோக்கன் என்ற படத்தை இயக்கியுள்ளார். அன் புரோக்கன் (Unbroken) என்ற படம் இரண்டாம் உலகப் போரைப் பற்றியதாகும்.

    இப்படத்தில் ஜேக் ஓ கோனெல், ஒலிம்பிக் வீரராக லூயிஸ் ஸம்பேரினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் 1936இல் பெர்லினில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் வெற்றி பெற்று 1941இல் அமெரிக்க விமானப் படையில் சேர்கிறார்.

    பசிபிக் கடல்பகுதியில் 47 நாட்கள் இவரும் இன்னும் சில விமானிகளும் ஜப்பானியரின் குண்டு வீச்சுக்குப் பலியாகாமல் பதுங்கி இருந்து உயிர்தப்பி வருகின்றனர். அவருக்கு அரபு விருது வழங்கி கௌரவிக்கிறது. இதுதான் அன்புரோக்கன் படத்தின்கதை.

    ஸம்பேரினி என்ற நிஜவீரர் ஜோலியின் பக்கத்து வீட்டுக்காரர் அவரது வீர வரலாற்றை ஜோலி படமாக எடுத்துள்ளார். ஸம்பேரினி அண்மையில் காலமானார். இந்தப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

    இந்தப் படத்தின் பிரீமியர் காட்சி ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்றது. அதில், ஏஞ்சலினா ஜோலி தனது கணவர் பிராட் பிட்டுடன் கலந்து கொண்டார். அங்கு இவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏஞ்சலினா, தற்போது நான் பல படங்களில் நடித்து வருகிறேன். எதிர்காலத்தில் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு முழுநேர இயக்குநராக திட்டமிட்டுள்ளேன் என்றார்.

    அதோடு சமூகத்திற்கு பல நல்ல காரியங்களை செய்ய விரும்புகிறேன்.இதன்மூலம் எனது வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சி கரமாக இருக்கும் என நம்புகிறேன்'' என்றும் கூறியுள்ளார்.

    எனவே ஏஞ்சலினா ஜோலியை இனி நாயகி என்று அழைப்பதை விட இயக்குநர் என்றே அழைக்கலாம். அந்த அளவிற்கு அந்த நாற்காலி அவருக்கு அழகு சேர்த்துள்ளது.

    ஆக்சன் நாயகி

    ஆக்சன் நாயகி

    கவர்ச்சியாக இருந்தாலும் லாரா கிராப்ட் கதாபாத்திரமாக ஆக்‌ஷன் அவதாரம் எடுத்த ‘டோம் ரைடர்' திரைப்படத்தை ஜோலியே நினைத்தாலும், மறக்க முடியாது. படத்தின் அகில உலக வசூல் சாதனையால் அல்ல. அந்தப் படத்தின் படப்பிடிப்பு கம்போடியாவில் நடந்தபோதுதான் அங்கு வாழும் அகதிகளின் துயர வாழ்வு பற்றி அறிந்துகொண்டார்.

    மாற்றிய வாழ்வு

    மாற்றிய வாழ்வு

    கம்போடியப் படப்பிடிப்பைப் பாதியில் முடித்துக்கொண்டு 2001-ம் ஆண்டு பிப்ரவரியில், அகதிகளை நேரில் சந்திக்கத் தனது முதல் 18 நாள்கள் பயணத்தைத் தொடங்கினார்.

    சமூகத் தொண்டு

    சமூகத் தொண்டு

    சியரா லியோன் மற்றும் தான்சானியாவில் கண்ட அகதிகளின் வாழ்நிலை தன்னை எத்தனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பதை ஊடகங்களிடம் வெளிப்படுத்தினார். அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்தார்.

    இயக்குநரானது எப்படி

    இயக்குநரானது எப்படி

    இவரது மனிதாபிமான சமூகப் பணிகளைக் கண்டு, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்ட பிறகு முன்பைவிடவும் வேகமாக செயல்பட ஆரம்பித்தார் ஜோலி. தான் பார்த்தவற்றைத் திரைப்படங்களில் பதிவு செய்ய நினைத்தார். இதனால் தற்போது ஹாலிவுட்டில் இயக்குநராகவும் வண்ணம் மாறி நிற்கிறார்.

    வெற்றி பெற்ற ஜோலி

    வெற்றி பெற்ற ஜோலி

    கடந்த 2007-ம் ஆண்டு எ ப்ளேஸ் இன் டைம் (A place in Time) என்ற ஆவணப்படத்தை இயக்கினார். பிறகு சிறிய இடைவெளி எடுத்துக்கொண்ட ஜோலி, போஸ்னியா போரைக் கதைக் களமாகக் கொண்டு, அதன் பின்னணியில் ஒரு மெல்லிய காதல் கதையை, ‘தி லேண்ட் ஆஃப் பிளட் அண்ட் ஹனி' (In the Land of Blood and Honey) என்ற முழுநீளப் படத்தை இயக்கினார். இந்தப் படம் ஹாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்றது. ஜோலியை ஒரு முழுமையான இயக்குநராகவும் ஏற்றுக்கொள்ள வைத்தது.

    முழுநேர இயக்குநர்

    முழுநேர இயக்குநர்

    ஜோலி, தன் கருணை மிகுந்த மனதாலும், அழகாலும், நடிப்பாலும் மயக்கியது போதாதென்று தற்போது தன் இயக்கத்தாலும் வசீகரிக்கப் போகிறார்.

    English summary
    Hollywood actress Angelina Jolie has confirmed her plans to retire as an actor to focus on her career as a film-maker. "I'll do a few more, but I'll be happy to let that all go at some point," she said. Further, the 39-year-old actress said, she would prefer directing movies unless there is a role that "really means something".
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X