காதலரை தனது கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி வைக்கும் நடிகை ஏஞ்சலினா ஜூலி
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி தனது லிவ் இன் பார்ட்னரான நடிகர் பிராட் பிட்டை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளாராம்.
ஹாலிவுட்டில் பல காலமாக பலர் கேட்கும் கேள்வி இது தான். நடிகர் பிராட் பிட்டும், அவரது காதலியும் லிவ் இன் பார்ட்னருமான ஏஞ்சலினா ஜூலியும் எப்பொழுது திருமணம் செய்து கொள்வார்கள் என்பது தான் அந்த கேள்வி.
அவர்கள் இருவரும் சேர்ந்து 6 குழந்தைகளை வளர்த்து வருகிறார்கள். அதில் இரட்டையர்கள் உள்பட 3 குழந்தைகள் அவர்களுடையது மீதமுள்ள 3 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டவர்கள்.

திருமணம்
2005ம் ஆண்டில் இருந்து ஒன்றாக வாழும் அவர்களை விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு குழந்தைகள் நச்சரித்து வருகிறார்களாம்.

பிராட்
குழந்தைகளுக்காக ஜூலியிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதாக பிராட் பிட் தெரிவித்ததில் உண்மை இல்லை என்று அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.

ஜூலி
ஜூலி பிராட் பிட் மீது பைத்தியமாக இருப்பதாகவும், அவரை மிகவும் காதலிப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் தங்களின் பட வேலைகளில் பிசியாக உள்ளார்கள்.

கவலை
படம் படம் என்று ஓடுவதால் பிராட் பிட் அருகிலேயே ஜூலியால் இருக்க முடியவில்லை. இதனால் ஜூலி தான் இல்லாமல் வாழ பழகிக்கொள்வார் என்ற கவலை பிராட் பிட்டுக்கு. அதனால் திருமணம் செய்தால் பிரியாமல் இருக்கலாம் என்று நினைக்கிறாராம் பிட்.

கட்டுப்பாடு
ஜூலி பிட்டை தனது கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி வைக்கிறார். பிட் போடும் உடை முதல் அனைத்தும் ஜூலியின் கட்டுப்பாட்டில் தான் என்று அவர்களுக்கு நெருக்கமான மற்றொருவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











