மீண்டும் போர் கதையை இயக்கும் ஏஞ்சலினா ஜூலி
நியூயார்க்: ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி மீண்டும் போர் சம்பந்தப்பட்ட கதையை படமாக்கி வருகிறார்.
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி நடிப்பு தவிர அவரின் சமூக சேவைக்கும் பெயர் பெற்றவர். அவருக்கு வாழ்நாள் முழுவதும் நடிகையாக மட்டும் இருக்க விருப்பமில்லை. இயக்குனர் ஆனால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் அவருக்கு வந்தது.
எடு பேப்பர், பேனாவை எழுது கதையை என்று ஒரு கதையை எழுதினார்.

ஆவணப்படம்
எ பிளேஸ் இன் டைம் என்ற ஆவணப் படத்தை எடுத்து அதை கடந்த 2007ம் ஆண்டில் வெளியிட்டார்.

முதல் படம்
ஆவணப்படம் எடுத்ததோடு அவரது இயக்குனர் ஆசை தீர்ந்துவிடவில்லை. இதையடுத்து பெட்டி நிறைய பணத்தை எடுத்தார், மூளையை கசக்கி ஒரு கதையை எழுதினார்.

இன் தி லேண்ட் ஆப் பிளட் அன்ட் ஹனி
இன் தி லேண்ட் ஆப் பிளட் அன்ட் ஹனி என்ற படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து வெளியிட்டார் ஜூலி. போஸ்னியா போர் பின்னணியில் அழகிய காதல் கதை தான் இந்த படம்.

அன்புரோக்கன்
தற்போது ஜூலி மீண்டும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இரண்டாம் உலகப் போரின்போது நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படம் தான்அன்புரோக்கன்.

நடிப்பு
இத்தனை ஆண்டுகளாக கேமராவுக்கு முன்பு மேக்கப்போட்டு நடித்த ஜூலிக்கு தற்போது கேமராவுக்கு பின்னால் இருக்க மட்டுமே பிடிக்கிறது. இதனால் நடிப்புக்கு டாட்டா பை பை காட்டும் திட்டம் கூட அவருக்கு உள்ளது.


Click it and Unblock the Notifications











