அரசியலில் குதிக்கும் பிரபல நடிகை... யாருக்கு எதிராக களமிறங்குகிறார் தெரியுமா?

அரசியல் எதிர்காலம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகை பேட்டி அளித்துள்ளார்.

சென்னை : பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சிலினா ஜோலி, தனது அரசியல் பணி குறித்து பேசியுள்ளார்.

ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஏஞ்சிலினா ஜோலி. தனது குழந்தைகளுக்காக கணவர் நடிகர் பிராட் பிட்டை விவாகரத்துக்கு செய்துவிட்டு, சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் பிபிசி ரேடியோவுக்கு நடிகை ஏஞ்சிலினா சமீபத்தில் பேட்டி அளித்தார். அப்போது, அரசியலில் ஈடுபடுவீர்களா என தொகுப்பாளர் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பட்டும் படாமல் அவர் பதில் அளித்தார்.

சிரித்திருப்பேன்

சிரித்திருப்பேன்

அவர் கூறியதாவது, " உண்மையை சொல்ல வேண்டும் என்றால், 20 வருடங்களுக்கு முன் இந்த கேள்வியை கேட்டிருந்தால் நிச்சயம் சிரித்திருப்பேன். சத்தியமாக எனக்கு தெரியவில்லை.

அரசியலுக்கு தகுதியானவளா நான்

அரசியலுக்கு தகுதியானவளா நான்

நான் எங்கு தேவைப்படுகிறேனோ அங்கு நான் நிச்சயம் இருப்பேன். ஆனால் நான் அரசியலுக்கு தகுதியான நபரா என தெரியவில்லை. நான் எப்போதும் எதையும் மறைத்து வைத்ததில்லை. நான் எப்போதும் வெளிப்படையாகவே இருக்கிறேன்.

மாற்றத்தை நோக்கி

மாற்றத்தை நோக்கி

எது மாற்றத்தை உண்டாக்கும் என தோன்றுகிறதோ அதை தான் நான் செய்வேன். தற்போது தான் ஐநா சபையுடன் இணைந்து ஏழை, எளிய மக்களுக்கு தேவையானதை செய்து கொண்டிருக்கிறேன்.

நினைத்ததை செய்கிறேன்

நினைத்ததை செய்கிறேன்

எந்த பதவியிலும் இல்லாமல் நான் நினைத்ததை செய்யும் இடத்தில் இப்போது இருக்கிறேன். அது என்னை பற்றியதோ, அல்லது எனது கொள்கைகள் சார்ந்ததாகவோ இல்லை. எனவே இப்போதைக்கு அமைதியாக இருக்கிறேன்", என பதிலளித்தார்.

டிரம்புக்கு எதிராக

டிரம்புக்கு எதிராக

அப்போது குறிக்கிட்ட தொகுப்பாளர், 2020ல் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு எதிராக போட்டியிடுவீர்களா எனக் கேட்டார். அதற்கு சிரித்துக்கொண்டே, 'நன்றி' என பதிலளித்தார் ஏஞ்சிலினா ஜோலி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X