twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எம்ஜிஎம் ஸ்டுடியோவை வாங்க அனில் அம்பானி முயற்சி

    By Staff
    |

    Daniel Craig
    ஜேம்ஸ் பாண்ட் படங்களைத் தயாரிக்கும் உரிமையை வைத்துள்ள எம்ஜிஎம் ஸ்டுடியோ பெரும் நஷ்டத்தில் மூழ்கியுள்ளது. அதை வாங்கும் முயற்சியில், ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் அதிபர் அனில் அம்பானி முயன்று வருகிறார்.

    இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றால் ஜேம்ஸ் பாண்ட் படங்களைத் தயாரிக்கும் உரிமை அனில் அம்பானிக்குக் கிடைக்கும்.

    எம்ஜிஎம் நிறுவனம் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நிறுவனத்தை வாங்க கடுமையாக முயன்று வருகிறது பிக் பிக்சர்ஸ். எம்.ஜி.எம் நிறுவனத்தை வாங்க 1.5 பில்லியன் டாலர் விலை பேசி வருகிறார் அனில் அம்பானி.

    இந்த டீல் முடிவுக்கு வந்தால் உலகின் மிகப் பெரிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் என்ற பெருமை அனில் அம்பானிக்குக் கிடைக்கும். மேலும் ஜேம்ஸ் பாண்ட் படங்களையும் தயாரிக்கும் உரிமையும் அவரிடம் வந்து சேரும்.

    ஏற்கனவே ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் டிரீம்ஒர்க்ஸ் ஸ்டுடியோவின் ஒரு பங்கு அனிலிடம் உள்ளது. மேலும் பிராட் பிட், ஜார்ஜ் க்ளூனி, ஜிம் கேரி, ஜூலியா ராபர்ட்ஸ் ஆகிய முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்களுடனும் அனில் அம்பானியின் நிறுவனம் ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளது.

    எம்.ஜி.எம். நிறுவனம் தனது அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தை 2011ம் ஆண்டு வெளியிடத் திட்டமிட்டுள்ளது. டேணியல் கிரேக்தான் இதில் பாண்ட் ஆக நடிக்கிறார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X