செல்லக் கழுதை லுலு.. விலங்குகளின் காதலன் அர்னால்டு !
கலிபோர்னியா: நடிகர் அர்னால்டு வீட்டில் செல்லப்பிராணிகளுடன் இருக்கும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு , புதிய கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.
நடிகர், தொழிலதிபர், பாடி பில்டர் மற்றும் அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர் தான் அர்னால்டு. தனது இருபதாவது வயதிலேயே மிஸ்டர் யூனிவர்ஸ் என்ற பட்டத்தை வென்றார் அர்னால்டு. ஆரம்பம் முதலே பாடி பில்டிங்யை முழுவீச்சாக செய்து வந்தார்.

பின் தனது கட்டு மஸ்தான பாடியுடன் ஹாலிவுட் சினிமாவில் கால் பதித்தார். ஹெர்குலஸ் இன் நியூயார்க் என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார் அர்னால்டு. இவரது உடம்பை பார்த்து பலரும் ஆச்சரியமடைந்தனர். பின் பல படங்களில் நடித்து வந்தார் அர்னால்டு.
சிறிது காலம் கழித்து ஆக்ஷன் ஸ்டாராக மாறினார் அர்னால்டு. கொனன் தி பார்பேரியன் படம் இவரது நடிப்பின் உச்சம். இப்படம் இரண்டாவது பாகமாக கூட எடுக்கப்பட்டது, இவர் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் அறிமுகமானது டேர்மினேட்டர் படம் மூலமாக தான். சில்வேஸ்டர் ஸ்டாலோன் உச்சத்தில் இருந்த நேரத்தில், தனது வித்தியாசமான நடிப்பால் மேலே வந்தவர் அர்னால்டு.

இதன் பின் கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னரானார் அர்னால்டு. சினிமாவிற்கு சிறிது காலம் முழுக்கு போட்டார். பின்னர் மீண்டும் நடிக்க வந்து கம்பேக் கொடுத்தார் ஆக்ஷன் ஸ்டார் அர்னால்டு.

பலருக்கும் விலங்குகளை பிடிப்பதை போன்று அர்னால்டுக்கும் மிகவும் பிடிக்கும். தனது வீட்டில் செல்லக் கழுதையை வளர்க்கிறார் அதற்கு லுலு மற்றும் போனி விஸ்கி என்று பெயர் வைத்துள்ளார். மேலும், எங்கு சென்றாலும் அழைத்து செல்கிறார். மேலும், அவற்றுடன் சேர்ந்து உணவு அருந்துவது, பல் துலக்கி விடுவது, தலை சீவி விடுவது என்று விலங்குகளின் காதலனாகவே மாறியுள்ளார் அர்னால்டு. அந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனியாக ஒரு போதும் உணவு அருந்த வேண்டாம் என்ற கேப்ஷனையும் வெளியிட்டு உள்ளார் அர்னால்டு. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











