எழுத்தாளருடன் நிக்கோல் காதலர் சமரசம்!

By Staff

Anna Nicole Smith
அவதூறு-எழுத்தாளரிடம் பணம் வாங்கிக் கொண்டு அன்னா நிக்கோலின் காதலர் சமரசம்

பிளேபாய் இதழுக்கு கவர்ச்சி போஸ் கொடுத்து பிரபலமான மறைந்த நடிகை, மாடலிங் அழகியான அன்னா நிக்கோல் ஸ்மித்தின் காதலரும், வக்கீலுமான ஹோவர்ட் ஸ்டெர்ன், தன்னைப் பற்றி அவதூறாக எழுதிய புத்தகத்தின் ஆசிரியர் மீது தொடர்ந்த அவதூறு வழக்கில் பெரும் பணம் பெற்றுக் கொண்டு சமரசமாகி விட்டாராம்.

கவர்ச்சி தாரகையாக வலம் வந்தவர் அன்னா நிக்கோல். இவரது உண்மையான பெயர் விக்கி லின் மார்ஷல். கடந்த 2007ம் ஆண்டு இவர் மரணமடைந்தார். அதிக அளவில் மருந்து சாப்பிட்டதால்தான் உயிரிழந்ததாக அப்போது கூறப்பட்டது.

இந்த நிலையில், அன்னா நிக்கோலின் மரணத்தை அடிப்படையாக வைத்து டிவி செய்தியாளரும், எழுத்தாளருமான ரீட்டா காஸ்பி ஒரு நூலை எழுதினார். இந்த நூலை ஹேச்சட் புக் குழுமம் வெளியிட்டது.

இந்த நிலையில், இதில், தன்னைப் பற்றி அவதூறாக எழுதியிருப்பதாகவும், அன்னா நிக்கோல், தனக்கு இடையிலான செக்ஸ் உறவு குறித்து தவறாக கூறப்பட்டிரு்ப்பதாகவும் கூறி புத்தக நிறுவனம் மற்றும் காஸ்பி மீது ஹோவர்ட் அவதூறு வழக்கு போட்டார். 60 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கோரியிருந்தார்.

இந்த நிலையில் கோர்ட்டுக்கு வெளியில் வைத்து ஹோவர்டுக்கும், காஸ்பிக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு விட்டதாகவும், இதற்காக பெரும் பணம் கைமாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அன்னா நிக்கோல் மர்மமான முறையில் மரணமடைந்தது தொடர்பாக ஹோவர்ட், அவருடைய உதவியாளராகளான டாக்டர்கள் கிறிஸ்டைன் எரெஷெவிச், இந்தியரான டாக்டர் சந்தீப் கபூர் ஆகியோர் மீது திட்டமிட்டு மருந்துகளை அதிக அளவில் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X