‘பேட்மேன்’வேடத்தில் பென் அப்லாக்கா..?: எதிர்ப்பு பிரச்சாரம்...50,000 பேர் கையெழுத்து ஆதரவு

லாஸ் ஏஞ்சல்ஸ்: பேட்மேன் கதாபாத்திரத்தில் பென் அப்லாக்கைப் போடக் கூடாது என்று கோரி ஒரு பெரும் பிரச்சாரமே நடந்து வருகிறது. இதில் கிட்டத்தட்ட 50,000க்கும் மேலானோர் கையெழுத்துப் போட்டு பென்னுக்கு டென்ஷன் ஏற்றியுள்ளனர்.

பேட்மேன் படத் தொடர்ச்சியில் பென்னை நடிக்க வைக்க முயற்சித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதையடுத்து எதிர்ப்புப் பிரசாரத்தை சிலர் தொடங்கியுள்ளனர். அதற்கு இதுவரை 50,000 பேரின் ஆதரவு கிடைத்துள்ளதாம்.

இதுதொடர்பான கோரிக்கை மனுவை change.org இணையதளம் ஏற்படுத்தியுள்ளது. அதில் பலர் கலந்து கொண்டு கையெழுத்துப் போட்டு வருகின்றனர்.

எதிர்ப்பு கையெழுத்து....

எதிர்ப்பு கையெழுத்து....

நடிக்கவே தெரியாதவர் பென். அவரைப் போய் எப்படி வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் பேட்மேன் கதாபாத்திரத்திற்குத் தேர்வு செய்யலாம் என்று எதிர்பார்ப்பாளர்கள் கேட்கின்றனர். இந்த எதிர்ப்பு மனுவில் இதுவரை 53,267 பேர் கையெழுதத்திட்டுள்ளனர்.

கேலிக்கூத்தாகி விடும்....

கேலிக்கூத்தாகி விடும்....

பென் இந்த பாத்திரத்திற்குப் பொருந்த மாட்டார். அவரிடம் நடிப்புத் திறன் இல்லை. அவர் சரியான நடிகரும் அல்ல. பேட்மேன் பாத்திரத்தை அவர் கேலிக்கூத்தாக்கி விடுவார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மோசமான நடிகர்....

மோசமான நடிகர்....

மேலும் அதில், அவரது தேர்வு முட்டாள்தனமானது, விசித்திரமானது. சாதாரண நடிகரை விட மோசமானவர் அவர். வேறு யாராவது அதில் நடிக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பென் என் எதிரியில்லை...

பென் என் எதிரியில்லை...

ஜான் ரோடன் என்பவர்தான் இந்த பிரசாரத்தைத் தொடங்கியவர் ஆவர். இதுகுறித்து ரோடன் கூறுகையில், பென் அப்லாக்கை நான் வெறுக்கவில்லை. தனிப்பட்ட கோபமும் இல்லை. இந்த பாத்திரத்திற்கு அவர் பொருந்த மாட்டார் என்பது எனது எண்ணம் என்றார்.

பென் தான் பேட்மேன்....

பென் தான் பேட்மேன்....

ஆனால் பேட்மேன் தொடர்ச்சியில் பென்தான் நடிக்கிறார். படம் 2015ல் வெளியாகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X