ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 10ம் பாகத்தில் இணைந்த ஆக்வாமேன் நடிகர்.. வேற லெவல் மிரட்டல் காத்திருக்கு!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல் தயாரித்து நடித்து வரும் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 10ம் பாகத்தில் ஆக்வாமேன் பட நடிகர் ஜேசன் மோமோ இணைந்துள்ளார்.

பால் வாக்கர் மறைந்ததில் இருந்தே புதிய புதிய ஹாலிவுட் நடிகர்களை ஒவ்வொரு புதிய பாகத்திலும் அழைத்து வந்து அதகளப்படுத்தி வருகிறார் நடிகர் வின் டீசல்.

ஜேசன் ஸ்டாதம், டுவைன் (ராக்) ஜான்சன், ஜான் சினாவை தொடர்ந்து ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் குடும்பத்தில் புதிய உறுப்பினராக ஜேசன் மோமோ இணைந்துள்ளார்.

6.6 பில்லியன் டாலர் வசூல்

6.6 பில்லியன் டாலர் வசூல்

கடந்த 2001ம் ஆண்டு முதல் வின் டீசல் நடிப்பில் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் பாகங்கள் வெளியாகி வருகின்றன. இதுவரை 9 பாகங்கள் வெளியாகி உள்ள நிலையில், ஒட்டுமொத்த வசூலாக 6.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்த ஃபிரான்சைஸ் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட் ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு எப்போதுமே செம ட்ரீட் கொடுப்பதை இந்த படம் தவறியதே இல்லை.

பால் வாக்கர் மரணம்

பால் வாக்கர் மரணம்

ஃபாஸ்ட் ஃபியூரியஸ் முதல் பாகம் முதல் 7வது பாகம் வரை நடித்திருந்த பிரபல ஹாலிவுட் நடிகர் பால் வாக்கர் 7வது பாகம் ஷூட்டிங் முழுதாக முடியும் முன்னரே கார் விபத்தில் உயிரிழந்தது ஒட்டுமொத்த ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. தனது உடன் பிறவா சகோதரராகவே நினைத்திருந்த வின் டீசலுக்கு வலது கரமே இழந்தது போல் ஆனது. எப்போது செட்டிற்குள் நுழைந்தாலும் பால் வாக்கரின் பிரிவு அவரை மனதளவில் பாதித்துக் கொண்டே இருக்கும் என்பது நிதர்சனம்.

ஜான் சினா

ஜான் சினா

கடந்த ஆண்டு வெளியான 9வது பாகத்தில் வின் டீசலின் திடீர் தம்பியாக பிரபல WWE சாம்பியன் ஜான் சினா நடித்திருந்தார். என்னடா இப்படி புதுசா கதை விடுறீங்க என ரசிகர்கள் கலாய்க்கவே ஆரம்பித்து விட்டனர். மற்ற பாகங்களை விட 9வது பாகம் சொதப்புவதற்கு அதுவும் ஒரு காரணம் ஆகிவிட்டது. இந்நிலையில், ஜேசன் மோமோ ஒன்னு விட்ட சித்தப்பா பையனா வரப் போகிறாரா? அல்லது டெரர் ஆன வில்லனாக வரப் போகிறாரா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

ஆக்வாமேன் நடிகர்

ஆக்வாமேன் நடிகர்

கேம் ஆஃப் த்ரோன்ஸில் கல் த்ரோகாவாக நடித்து அசத்திய ஜேசன் மோமோ ஆக்வாமேன் படத்தில் நாயகனாக நடித்து பட்டையை கிளப்பினார். ஜஸ்டீஸ் லீக் படத்திலும் ஆக்வாமேனாக நடித்த ஜேசன் மோமோ ஆக்வாமேன் 2 படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். இந்நிலையில், ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 10வது பாகத்தில் வின் டீசல் உடன் இணைந்து நடிக்க உள்ளார்.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

வின் டீசல் மற்றும் லின் இணைந்து தயாரிக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு மே 19ம் தேதி ரிலீஸ் பண்ணும் பிளான் உடன் ஆரம்பமாக உள்ளது. ஹாலிவுட்டின் யூனிவர்ஸல் ஸ்டூடியோ இந்த படத்தையும் ரிலீஸ் செய்கிறது. ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படங்களின் ஆஸ்த்தான இயக்குநர் ஜஸ்டின் லின் இந்த படத்தை இயக்குகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X