ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு 2-வது இதய அறுவை சிகிச்சை.. நலமாக இருப்பதாக தகவல்!

By

கிளீவ்லேண்ட்: இரண்டாவது முறையாக இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர், தான் நலமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகர், அர்னால்ட் ஸ்வாஸ்நேகர். ஆக்‌ஷன் படங்களின் அடையாளமாக இருப்பவர்.

டெர்மினேட்டர் வரிசை படங்கள், கமாண்டோ, பிரிடேட்டர், என்ட் ஆப் த டேஸ், எஸ்கேப் பிளான் உட்பட பலர் படங்களில் நடித்துள்ளார்.

உலகம் முழுவதும்

உலகம் முழுவதும்

1991-ல் வெளியான டெர்மினேட்டர் 2, ஜட்ஜ்மெண்ட் டே படத்தை ரசிகர்களால் மறக்கமுடியாது. இதன் இயக்கம், கதை, தயாரிப்பு ஆகிய பொறுப்புகளை ஏற்றிருந்தார், அர்னால்ட். இந்தப் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள்தான் உலகம் முழுவதும் அர்னால்டுக்கு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொடுத்தது.

சென்னையில் அர்னால்ட்

சென்னையில் அர்னால்ட்

2003 ஆம் ஆண்டில் இருந்து 2011 வரை கலிபோர்னியா மாகாண ஆளுநராக இருந்த அர்னால்ட், சென்னைக்கும் ஒரு முறை வந்திருக்கிறார். விக்ரம், எமி ஜாக்சன் நடித்த ஐ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்காக, சென்னை வந்திருந்தார் அவர். அப்போது அவர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்துப் பேசியிருந்தார்.

இதய அறுவை

இதய அறுவை

73 வயதான அர்னால்ட், இரண்டாவது இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகக் கூறியுள்ளார். மருத்துவமனையில் படுக்கையில் இருந்தபடி புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். நுரையீரல் வால்வை மாற்றுவதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டில் அர்னால்டுக்கு முதல் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Recommended Video

Arya Vs Ramya | Terminator Dark Fate Tamil Trailer Launch
சிறப்பாக உணர்கிறேன்

சிறப்பாக உணர்கிறேன்

அறுவை சிகிச்சைக்குப் பிறகு தன் புகைப்படத்தைப் வெளியிட்டுள்ள அவர், தான் நன்றாக இருப்பதாகக் கூறி உள்ளார். 'கிளீவ்லேண்ட் கிளினிக்கில் உள்ள குழுவுக்கு நன்றி, நான் தற்போது சிறப்பாக உணர்கிறேன். ஏற்கனவே கிளீவ்லேண்டின் தெருக்களில் உங்கள் அற்புதமான சிலைகளை கண்டு அனுபவித்து வருகிறேன். எனக்கு சேவை செய்த செவிலியருக்கும் நன்றி' என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X