twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போரை நிறுத்துங்கள் புதின்.. இது சட்டவிரோதமானது.. மக்கள் ஆதரிக்கமாட்டார்கள்.. அர்னால்டு ஆவேசம்!

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகரும் முன்னாள் கலிபோர்னியாவின் கவர்னருமான அர்னால்டு வெளியிட்டுள்ள 9 நிமிட வீடியோ உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    Recommended Video

    போரை நிறுத்துங்கள் புதின்.. இது சட்டவிரோதமானது.. மக்கள் ஆதரிக்கமாட்டார்கள்.. அர்னால்டு ஆவேசம்!

    இந்த போர் ரஷ்ய மக்கள் நடத்தும் போர் இல்லை என்றும், கிரெம்ளின் மாளிகையில் உள்ளவர்கள் நடத்தும் சட்டவிரோதமான போர் என்றும் போரை ஆரம்பித்த அதிபர் புதின் போரை நிறுத்தவும் வேண்டும் என்றும் ஏகப்பட்ட தகவல்களை அடுக்கி ரஷ்ய மக்கள் மற்றும் ரஷ்ய ராணுவ வீரர்கள் உணரும் விதமாக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் அர்னால்டு.

    உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள இந்த போருக்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நடிகர் டிகாப்ரியோ உக்ரைன் மக்களுக்காக 70 கோடி ரூபாய் வரை நிதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

    நடிகர் விஜய்யுடன் நடிக்க ஆசை...கின்னஸ் சாதனையாளர் விருப்பம்நடிகர் விஜய்யுடன் நடிக்க ஆசை...கின்னஸ் சாதனையாளர் விருப்பம்

    ரஷ்யா தொடுத்த போர்

    ரஷ்யா தொடுத்த போர்

    உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொடங்கி உள்ள போர் காரணமாக இரு நாடுகளில் வசிக்கும் மக்கள் இடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. போரை நிறுத்த வேண்டும் என போராடும் ரஷ்யர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். உக்ரைனில் பொதுமக்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் குண்டு மழை பொழிந்து வருகிறது. உலக நாடுகள் பலவும் ரஷ்யா இந்த போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தங்கள் நாட்டை காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கில் உக்ரைனும் ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

    அர்னால்டு அட்வைஸ்

    அர்னால்டு அட்வைஸ்

    ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் இந்த போருக்கு எதிரான தங்களின் குரல்களை தயங்காமல் கூறி வருகின்றனர். இந்நிலையில், நடிகரும் முன்னாள் கலிபோர்னியா மாகாண ஆளுநருமான அர்னால்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள 9 நிமிட வீடியோ உலக மக்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

    ரஷ்யர்களை பிடிக்கும்

    ரஷ்யர்களை பிடிக்கும்

    தனது 14வது வயதில் ரஷ்யாவிற்கு வந்திருக்கிறேன் என்றும், ரஷ்யவின் வெயிட் லிஃப்ட் சாம்பியன் Yuri Vlasov-ன் மிகப்பெரிய ரசிகன் நான். என் அறையில் அவருடைய போட்டோவை ஒட்டி வைத்து உடற்பயிற்சி செய்வேன். ஆனால், என் அப்பாவுக்கு ரஷ்யர்களை பிடிக்காது. அந்த போட்டோவை கிழித்துப் போட சொன்னார். ஆனால், நான் கேட்கவில்லை. ரெட் ஹீட் படத்தை ரஷ்யாவின் ரெட் ஸ்கொயரில் படமாக்கினோம். முதல் முதலாக அமெரிக்க படம் ஒன்று அந்த இடத்தில் படமாக்கப்பட்டது அப்போது தான் என சிறு வயது முதலே ரஷ்யா மற்றும் ரஷ்யர்களுடன் தனக்கு இருக்கும் நட்பு குறித்து பேசி தனது உரையை தொடங்கினார் அர்னால்டு.

    ரஷ்யர்களுக்கான போர் இல்லை

    ரஷ்யர்களுக்கான போர் இல்லை

    உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் இந்த சட்டவிரோதமான போரை மக்கள் ஆதரிக்கவில்லை. இது மக்களுக்கான போர் இல்லை. கிரெம்லிம் நகரில் ஆட்சியில் இருப்பவர்கள் இந்த அழிவை ஆரம்பித்து இருக்கிறார்கள். ரஷ்ய ராணுவ வீரர்கள் உக்ரைனில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் செய்து வருகின்றனர். பல ரஷ்ய வீரர்கள் உக்ரைன் குடும்பங்களை காப்பாற்றி வருவது அவர்களின் மன நிலையை தெளிவாக காட்டுகிறது.

    உங்கள் உறவினர்கள் மீது விழும் குண்டுகள்

    உங்கள் உறவினர்கள் மீது விழும் குண்டுகள்

    ரஷ்ய படையினர் உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் நீங்கள் போடும் குண்டுகள் எல்லாம் உங்கள் உறவினர்கள் மீது தான் விழுகின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ரஷ்ய ராணுவ வீரர்களுக்கும் உக்ரைனில் உள்ள ஒரு மில்லியன் மக்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை யாரும் மறந்து விட வேண்டாம் என்றும், நீங்கள் போடும் குண்டுகள், அங்கே பள்ளிகளிலும், மருத்துவமனைகளிலும், பொதுமக்கள் வசிக்கும் வீடுகளிலும் விழுந்து சர்வ நாசத்தை ஏற்படுத்துகின்றன. ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களும், ராணுவ வீரர்களும் உண்மை என்ன என்பதை உணர்ந்து உடனடியாக அவர்களுக்கு எதிராக திரும்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.

    போரை நிறுத்துங்கள் புதின்

    போரை நிறுத்துங்கள் புதின்

    கடைசியாக இந்த போரை ஆரம்பித்தது நீங்கள் தான். உக்ரைன் ஆரம்பிக்கவில்லை. உங்களின் பேராசைக்காகவும் உங்கள் பலத்தை காட்டவும் இந்த போரை ஆரம்பித்த நீங்களே இந்த போரை நிறுத்துங்கள் புதின் என ரஷ்ய அதிபருக்கும் அறிவுரை கூறியுள்ள அர்னால்டின் வீடியோ உலகளவில் டிரெண்டாகி வருகிறது.

    English summary
    Arnold Schwarzenegger's ask Putin to stop the War immediately and advise Russian People and Soldiers this war is a illegal one.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X